சாய்ந்தமருது ஊடகப் பிரிவு

சாய்ந்தமருது ஊடகப் பிரிவு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சாய்ந்தமருது ஊடகப் பிரிவு, Home improvement, sainthamaruthu, Kalmunai.

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் ஜனாதிபதி அனுசரணையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.!மறுமலர்ச்சி மன்றத்...
17/05/2026

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் ஜனாதிபதி அனுசரணையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.!

மறுமலர்ச்சி மன்றத்திடம் ஆதம்பாவா எம்.பி உறுதி.!

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் அனுசரணையுடன் தன்னால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்திடம் உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகளிடையான முக்கிய சந்திப்பு இன்று சனிக்கிழமை (16) காலை அவரது மாளிகைக்காடு அலுவலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலும் அதனைத் தொடர்ந்து நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் இவற்றுக்கு முன்னோடியாக தற்காலிக அலுவலக வசதிகள், கனரக வாகன வசதிகள் மற்றும் ஆளணி உள்ளிட்ட பௌதீக வளங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் பாராளுமன்ற உறுப்பினரின் வகிபாகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்களை மத்திய அரசின் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சு, கிழக்கு மாகாண சபை மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக துரிதமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முழுமையான அனுசரணை இன்றியமையாததாகும் என்று சுட்டிக்காட்டிய மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகள், இதற்கு ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் ஜனாதிபதியின் நெருங்கிய தோழராகவும் அதிகாரத்துடன் திகழ்கின்ற அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி அவர்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினர்.

இந்த விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து, செயற்படுத்துவதில் தனக்குள்ள பொறுப்புணர்வையும்
ஆர்வத்தையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள், இது தொடர்பிலான தனது நடவடிக்கைகளுக்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரதும் சிவில் சமூக அமைப்புகளினதும் முழுமையான ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையை தன்னால் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் குறுகிய கால அவசர அழைப்பின் பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் இந்த விடயம் தொடர்பில் மறுமலர்ச்சி மன்றத்தின் அனைத்து செயற்பாட்டாளர்கள் மற்றும் போராளிகளையும் ஏனைய அமைப்பினரையும் ஒன்றிணைத்ததாக பரந்துபட்ட கலந்துரையாடல் ஒன்றை விரைவில் ஒழுங்கு செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ். முஹம்மட் குறிப்பிட்டுள்ளார்.

✍️அஸ்லம் எஸ்.மௌலானா

அஸ்ஸலாமு அலைக்கும் சாய்ந்தமருதூரின் நகர சபை தொடர்பாக இன்று சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமான கருத்துகளையும் விளம்பரங்க...
12/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

சாய்ந்தமருதூரின் நகர சபை தொடர்பாக இன்று சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமான கருத்துகளையும் விளம்பரங்களையும் பதிவு செய்து வருகின்றார்கள். ஆனால் உண்மையான நிலையை ஆழமாக சிந்தித்து பார்க்கும்போது, “கையில் நெய்யை வைத்துக்கொண்டு வெண்ணெய் தேடுவது” போன்ற நிலைமையில்தான் நாம் இருப்பது தெளிவாக உணரப்படுகின்றது.

ஏனெனில் நமது சாய்ந்தமருதின் உரிமைகள், அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து நேரடியாக பேசக்கூடிய ஆற்றல் கொண்டவராக, ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம் பாவா அவர்கள் இருக்கின்றார்கள். அவருடன் ஒற்றுமையாக இணைந்து, கலந்துரையாடி, நமது மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் சரியான முறையில் முன்வைத்து செயற்பட்டால், பல விடயங்களை சாதிக்கக்கூடிய வலிமையும் வாய்ப்பும் நமக்குள் இருக்கின்றது.

இந்த உண்மையை நமது ஊரின் பல புத்திசாலி மக்களும் ஏற்கனவே புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் இன்னும் சிலர் புரிந்தும் புரியாதவர்களாக நடந்து கொண்டு, தேவையற்ற விமர்சனங்களிலும் பிரிவினை கருத்துகளிலும் நேரத்தை செலவழித்து வருகின்றார்கள் போல சமூக வலைத்தளங்களை பார்க்கும்போது தோன்றுகின்றது.

இன்று சாய்ந்தமருதுக்கு மிகவும் தேவையானது விமர்சன அரசியல் அல்ல; ஒற்றுமை, புரிதல் மற்றும் செயல்முறை அரசியலாகும். ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டே இருந்தால் அபிவிருத்தி எட்டாக்கனியாகி விடும். ஆனால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஊரின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்பட்டால், சாய்ந்தமருதின் எதிர்காலம் இன்ஷா அல்லாஹ் மிகவும் அழகாக உருவாகும்.

ஆகவே “என் குழு – உன் குழு” என்ற எண்ணங்களை ஒதுக்கிவைத்து, “நமது சாய்ந்தமருது” என்ற ஒரே எண்ணத்துடன் அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டிய காலம் இதுவாகும்.

ஒற்றுமை இருந்தால் முன்னேற்றம் வரும்.
பிரிவினை இருந்தால் பின்னடைவே வரும்.

எனவே நாம் அனைவரும் ஒன்று கூடி, நமது சாய்ந்தமருதை அபிவிருத்தி பாதையில் கட்டியெழுப்புவோம்.

வஸ்ஸலாம்.

சாய்ந்தமருது ஊடகப் பிரிவு

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகள...
11/05/2026

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் திரு. ஆசிக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிறப்புப் பங்கேற்புடனும் நடைபெற்றது.
இதன் போது பின்வரும் வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன:
தண்டேல் வீதி
தோணா ஈஸ்ட் வீதி
போக்கடி குறுக்கு வீதி
மேலும், இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், தேசிய மக்கள் கட்சியின் பிரஜா சக்தி தவிசாளர்கள், அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள், பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலனுக்கும் பெரும் பங்களிப்பாக அமையும் என்பதில் ஐய்யமில்லை
சாய்ந்தமருது ஊடகப்பிரிவு

15/12/2023
0774236765
11/10/2022

0774236765

PANTRY CUPBOARDS & FURNITURE - 0774236765  / 0789928521
12/12/2021

PANTRY CUPBOARDS & FURNITURE - 0774236765 / 0789928521

06/08/2021
Mr. Faizer SainthamaruthuHurry to make your dream true call me 0774236765
04/03/2021

Mr. Faizer
Sainthamaruthu
Hurry to make your dream true call me 0774236765

Address

Sainthamaruthu
Kalmunai
00

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94 77 423 6765

Website

Alerts

Be the first to know and let us send you an email when சாய்ந்தமருது ஊடகப் பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share