Accord Associate

  • Home
  • Accord Associate

Accord Associate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Accord Associate, Architectural Designer, .

11/03/2020

The official blog of Activision, publishers of Call of Duty, Sekiro, Crash Bandicoot, Skylanders, and more.

வீட்டை அழகுபடுத்துவது எப்படி?வீடு கட்டுவது என்பது வாழ்வில் ஒரு கனவு. அந்த கனவு நிறைவேறியவுடன் வேலை எல்லாம் முடிந்து விட்...
06/12/2018

வீட்டை அழகுபடுத்துவது எப்படி?

வீடு கட்டுவது என்பது வாழ்வில் ஒரு கனவு. அந்த கனவு நிறைவேறியவுடன் வேலை எல்லாம் முடிந்து விட்டது என அப்படியே இருந்து விட முடியுமா? கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை பராமரிக்கவேண்டும்.சின்ன சின்ன விஷயங்களில் வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும். வீட்டை அழகுப்படுத்துவது முக்கியமான விஷயம், தேவையற்ற பொருள்களை கண்டுபிடிப்பது.

தேவையான பொருள்கள, தேவையற்ற பொருள்கள் என எப்படி கண்டுபிடிப்பது? நாம் ஒவ்வொரு முறை வீட்டை சுத்தப்படுத்தும் போது எதற்கும் தேவைப்படும் என சில பொருள்களை சேமித்து வைத்திருப்போம். அது வீட்டை அடைத்துக்கொண்டு இருப்பது மட்டுமில்லாமல் வீட்டில் தூசி அடையும் இடமாகவும் இருக்கும். அதனால் வீட்டின் அழகு பாதிக்கப்படும். இது மாதிரி தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தினலேயே போதுமானது.

கதவுகளையும் அழகுப்படுத்த வேண்டும். நிறம் மங்கி போயிருந்தால் அதை பூசவேண்டும். கைப்படிகளில் துருப்படித்திருந்தால் அதை மாற்ற வேண்டும். இல்லையெனில் அது கைகளில் காயங்களை ஏற்படுத்திவிடும். பெரும்பாலும் துருப்பிடிக்காத பொருள்களான கட்டுமான பொருட்களை வாங்கவேண்டும். வீட்டை சுற்றி பூந்தோட்டம் அமைக்கலாம். இல்லையெனில் தொட்டிகளிலாவது செடி வளர்க்கலாம். அது வீட்டிற்கு அழகு தரும்.

வீட்டிற்கு அழகு கூட்டுவது தரைகள். தரைகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். தரைகளை அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். வீட்டின் மொட்டை மாடிகளையும் கவனமாக பார்க்க வேண்டும். மழைக்காலங்களில் நீர் வெளியேறும் குழாய்களில் அடைப்பு இருந்தால் உடனே சரி செய்ய வேண்டும்.

குப்பைகளை சேர்ந்து இருந்தால் அவற்றை துடைத்து சுத்தம் செய்யவேண்டும். சமையலறையை சுத்தமாகவும், நவீனமாகவும் வைத்திருக்க வேண்டும். அதற்குள் பழைய பொருள்கள் போடும் அறையாக வைத்திருக்ககூடாது. இதை அகற்றினாலேயே சமையறை அழகாக காட்சி தரும்.

உண்ணவும், உறங்கவும், கதை பேசுவும் மட்டுமா வீடு? அன்னையின் அணைப்பின் கதகதப்பைத் தர வல்லதல்லவா வீடு? வெயில், மழை, பனி, குள...
06/12/2018

உண்ணவும், உறங்கவும், கதை பேசுவும் மட்டுமா வீடு? அன்னையின் அணைப்பின் கதகதப்பைத் தர வல்லதல்லவா வீடு? வெயில், மழை, பனி, குளிர் என அனைத்திலிருந்தும் நம்மைக் காப்பது வீடு. நம் துக்கம், சந்தோஷம், கோபம், விருப்பு, வெறுப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் மவுனமாய் உள்வாங்கிக்கொள்ளும் உயிரற்ற, ஆனால் உயிருக்குயிரான இடம் வீடு.

ஆனால் அதைப் பராமரிப்பதில் நம் காட்டும் அக்கறையைப் பற்றிச் சொல்ல வாரத்தைகள் இல்லை. பல லட்சம் செலவு செய்து வீட்டைக் கட்டி வந்தவுடன் முடிந்துவிடுவதில்லை நம் பணி. அதனை அழகுபடுத்துவதிலும் பராமரிப்பதிலும்தான் உண்மையான திறமை உள்ளது. அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. மிக எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நம்முடைய வீட்டை அனைவரும் ரசித்துப் பாராட்டும் வண்ணம் அமைக்கலாம்.

வீடு பொலிவுடன் திகழ அலங்காரமான, படோபமான பொருட்கள் தேவை என்றில்லை. எளிமைதான் என்றுமே அழகு. வீடெங்கும் நிறைந்திருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினாலேயே வீடு அழகு பெற்றுவிடும். வீடு சிறியதாக இருக்கிறது, ஆனால் பொருட்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன, எதை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை.

பழையன கழிந்த பிறகு மட்டுமே புதியன புக வேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களைச் சேர்க்காதீர்கள். என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்று பொருட்களைச் சேகரிக்காதீர்கள். ஒரு பொருளை ஒரு மாதத்துக்கு ஒரு முறையேனும் நாம் உபயோகிக்கவில்லையெனின் அதன் பயன்பாடு நமக்குத் தேவையில்லை என்றே அர்த்தம். அதைத் தூர வீசிவிடலாம். மனமில்லை எனின் அட்டைப்பெட்டியில் போட்டு லாஃப்ட் என்னும் பரணில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதே. சிலர் விருந்தாளிகள் வரலாம் என்று வரவேற்பறையை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு பிற அறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர். இது தவறு. சமையலறை, படுக்கையறை, குளியலறை என்று வீடு முழுக்கவுமே கண்ணும் கருத்துமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். கூடுதலாகச் சில நிமிடங்கள் வீட்டைப் பேணுவதில் செலவழித்தால் இது சாத்தியமே.

வீட்டின் தரையைத் தினமும் சுத்தம் செய்வது போலவே சமையல் மேடையையும், சிங்க்-ஐயும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். குளியலறையைத் தினமும் கழுவி நீரில்லாமல் துடைத்துவிட்டால் அவை நீண்ட நாட்கள் பொலிவுற விளங்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜில் உள்ள காய், பழவகைகளைக் கை பார்க்க வேண்டும். மீந்த குழம்பு வகைகளைத் தூர வீச வேண்டும். வாரம் ஒரு முறை மைக்ரோவேவ் மற்றும் ஃபிரிட்ஜை சுத்தமாகத் துடைக்க வேண்டும்.

மாதமொரு முறை அனைத்து கப்போர்ட்களையும் ஒதுக்கி பேப்பர் மாற்ற வேண்டும். சமையலறைப் பொருட்களைச் சரி பார்த்து வெயிலில் காய வைக்க வேண்டியவற்றை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும். மின் சாதனங்களை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அடிக்கடித் துடைத்து சரிபார்த்து உள்ளே வைக்க வேண்டும். அழையா விருந்தாளிகளாய் வரும் தூசியும், பூச்சிகளும், தம்முடன் அழைத்து வருவது நோய் நொடிகளைத்தான் என்பதை உணர்ந்து சுத்தத்தைப் பேண வேண்டும்.

விருந்தினர் வரும் வீடு அழகாய்த் திகழ வேண்டும் என்பது அனைவரின் அவாவும்கூட. அந்நேரம் அனைத்தையும் ஒதுக்கி அடுக்கி வைக்காமல் எப்போதுமே அதுபோல் வைத்திருப்பதுதான் சாமர்த்தியம். எந்தப் பொருளையையுமே எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்தாலே பாதி வேலை முடிந்துவிடும். எந்தப் பொருளையும் தேடாமல் எடுத்துக் கொடுக்கும் வகையில் நம் வீட்டில் பொருட்கள் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து முயன்றால் மட்டுமே வீட்டை அழகாகப் பராமரிக்க முடியும். வீட்டைக் கலைநயத்துடன் கட்டமைத்து, உள் அலங்காரம் செய்திருந்தாலும் அதைப் பராமரிப்பதைப் பொறுத்தே வீட்டின் அழகு வெளிப்படும்.

நன்றி: முருகேஸ்வரி ரவி

06/12/2018

We are doing interior and exterior designs @ low cost....

06/12/2018

All are Welcome to our new page...

Address


Telephone

7598000325

Website

Alerts

Be the first to know and let us send you an email when Accord Associate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Home Improvement Business?

Share