Mrs Home Food

Mrs Home Food content creator, explore health food
(15)

15/05/2026

“அமைதியாக போராடு…
உன் வெற்றி ஒருநாள் சத்தமாக பேசும்.”

15/05/2026

“உழைப்பை நம்பி நடந்தால்
தோல்வி கூட ஒரு நாள் வெற்றியாக மாறும்.”

🌯குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் தக்காளி சாஸ் மயோனெய்ஸுடன் சாப்பிட்டால் சூப்பர்தேவையான பொருட்கள்பனீர் – 200 ...
15/05/2026

🌯குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் தக்காளி சாஸ் மயோனெய்ஸுடன் சாப்பிட்டால் சூப்பர்

தேவையான பொருட்கள்

பனீர் – 200 கிராம்
மைதா – 3 டேபிள்ஸ்பூன்
கார்ன் ப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
பிரெட் கிரம்ப்ஸ் – 1 கப்
எண்ணெய் – பொரிக்க தேவைக்கு
லாலிபாப் ஸ்டிக்

செய்வது எப்படி

பனீரை சதுரமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் ப்ளோர், மிளகாய் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவாக கலக்கவும்.

பனீர் துண்டுகளை இந்த மாவில் நன்றாக தோய்க்கவும்.

பிறகு பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி கோட்டிங் செய்யவும்.

கடாயில் எண்ணெய் சூடானதும் பனீர் துண்டுகளை பொன்னிறமாக பொரிக்கவும்.

பொரித்த பனீரில் லாலிபாப் ஸ்டிக் குத்தி பரிமாறவும்.

🍗மிரபகாயா சிக்கன் ஃப்ரை 🍗சாப்பாட்டுக்கும், சப்பாத்திக்கும் சூப்பராக இருக்கும்.தேவையான பொருட்கள்சிக்கன் – ½ கிலோபெரிய வெங...
15/05/2026

🍗மிரபகாயா சிக்கன் ஃப்ரை 🍗சாப்பாட்டுக்கும், சப்பாத்திக்கும் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – ½ கிலோ
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 8 முதல் 10
இஞ்சி பூண்டு விழுது – 1½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க

செய்வது எப்படி

முதலில் சிக்கனை நன்றாக கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

பிறகு சிக்கன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

சிக்கனில் இருக்கும் தண்ணீர் வற்றி எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.

கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

14/05/2026

Mud pot fish curry benefits

14/05/2026

அமைதியாக உழை…
ஒருநாள் உன் வெற்றி சத்தமாக பேசும்.”

🥩பரோட்டா, சப்பாத்தி, தோசைக்கு செம்ம காம்போ சாப்பாட்டுடன் சூப்பராக இருக்கும்தேவையான பொருட்கள்:மட்டன் – ½ கிலோநெய் – 4 டேப...
14/05/2026

🥩பரோட்டா, சப்பாத்தி, தோசைக்கு செம்ம காம்போ சாப்பாட்டுடன் சூப்பராக இருக்கும்

தேவையான பொருட்கள்:
மட்டன் – ½ கிலோ
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு

செய்வது

1️⃣ மட்டன் வேகவைத்தல்

மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குக்கரில் 4–5 விசில் வேகவைக்கவும்.

2️⃣ மசாலா தயார்

வறுக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் நன்றாக வாசனை வரும் வரை வறுத்து அரைக்கவும்.

3️⃣ கீ ரோஸ்ட் செய்வது

கடாயில் நெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக கிளறவும்.

4️⃣ இறுதி ஸ்டெப்

அரைத்த மசாலா மற்றும் வேக வைத்த மட்டன் சேர்த்து மிதமான தீயில் நெய் பிரியும் வரை ரோஸ்ட் செய்யவும்.

🔥 மேலே சிறிது நெய் ஊற்றி 5 நிமிடம் கிளறினால் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் வரும்

🥭Salem malkovo mambalam yummy 😋
14/05/2026

🥭Salem malkovo mambalam yummy 😋

14/05/2026

🥜Roasted cashewnut and brown sugar for snacks

🥭✨குளிர்ச்சியாக பரிமாறினால் சம்மர் ஸ்பெஷல் டெசர்ட்டாக செம்மையாக இருக்கும்🥭✨ செய்வது எப்படி👩‍🍳1️⃣ சேமியா வறுத்தல்கடாயில் ...
14/05/2026

🥭✨குளிர்ச்சியாக பரிமாறினால் சம்மர் ஸ்பெஷல் டெசர்ட்டாக செம்மையாக இருக்கும்🥭✨

செய்வது எப்படி👩‍🍳
1️⃣ சேமியா வறுத்தல்

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் சேமியாவை லேசாக பொன்னிறமாக வறுக்கவும்.

2️⃣ பால் சேர்த்தல்

பாலை சேர்த்து சேமியா நன்றாக வெந்துவரும் வரை கொதிக்க விடவும்.

3️⃣ மாம்பழ கலவை

மாம்பழத்தை மிக்ஸியில் அரைத்து ப்யூரி போல தயாரிக்கவும்.

பால் கலவை குளிர்ந்த பிறகு மாம்பழ ப்யூரி மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

4️⃣ இறுதியாக

ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும்.

🐟🔥சூடான சாதம், ரசம் அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் செம்ம டேஸ்ட்மீன் வறுவல் ரெசிபி 🐟🔥தேவையான பொருட்கள்:மீன் துண...
14/05/2026

🐟🔥சூடான சாதம், ரசம் அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் செம்ம டேஸ்ட்

மீன் வறுவல் ரெசிபி 🐟🔥
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் – 500 கிராம்
மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு / அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

செய்வது எப்படி👩‍🍳
1️⃣ மசாலா தயார்

ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.

2️⃣ மீனில் தடவுதல்

அந்த மசாலாவை மீன் துண்டுகளில் நன்றாக தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

3️⃣ வறுத்தல்

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை போடவும்.

மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக crispy ஆகும் வரை வறுக்கவும்.

4️⃣ இறுதியாக

கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.

Address

Chennai
Chennai

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Mrs Home Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mrs Home Food:

Share