PAARK Nursery & Gardens

PAARK Nursery & Gardens Paark Nursery & Gardens is a Home / Garden setup. We sell plants, Manure, Red soil mix, grow bags,

We sell plants, Manure, Red soil mix, grow bags, pots & shade net.

07/12/2022

List of Full Form For Beginners 💥🚀
Tech2 etc 👍

04/10/2022
02/10/2022

The discoveries took place during an ASI exploration in the Bandhavgarh reserve forest in Madhya Pradesh.

26/09/2022
24/09/2022
04/09/2022
எலுமிச்சைப் புல் LEMON GRASSஎலுமிச்சைப் புல்/தேசிப் புல் (ஆங்கிலம்: Lemongrass) என்பது ஒரு ஒருவித்திலைத் தாவரம் ஆகும். இ...
02/05/2018

எலுமிச்சைப் புல் LEMON GRASS

எலுமிச்சைப் புல்/தேசிப் புல் (ஆங்கிலம்: Lemongrass) என்பது ஒரு ஒருவித்திலைத் தாவரம் ஆகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். இதில் பல வகைகளும் உள்ளன.
இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. இதனால் இதனை மக்கள் பொதுவாக உட்கொள்வது வழக்கம்
Video link : https://www.youtube.com/watch?v=NKQcABX3Gug
இலங்கையின் மாத்தறை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் இது வர்த்தகத்திற்காகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இதன் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்களுக்கும் பயன்படுவதால் ஆயுர்வேத மருத்துவத்தில், குறிப்பாக தகர்வு, முறிவு போன்றவற்றுக்கு மருந்தளிப்பதில் இது முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.
இவ்வகைப்புல்லால் செய்யப்படும் ஒரு வகை தேநீரினை பிரேசில் நாட்டுக்காரர்கள் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். அவை மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்துவதாக நம்புகிறார்கள். நைஜீரியாவில், இயற்கை மருத்துவர்கள் இதனை தொண்டை கமைச்சலுக்கும், காய்ச்சல் குறையவும் பயன்படுத்துகிறார்கள்.
இந்திய மருத்துவ ஆராய்சியாளார்கள் புற்றுநோய்க்கான செல்களுடன் நடத்திய ஆராய்சியில், எலுமிச்சைப்புல்லின் எண்ணையானது அவற்றைக் குறைப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். பிரேசில் ஆராய்சியாளர்கள் எலிகளை வைத்து நடத்திய சோதனையில், எலுமிச்சைப்புல் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்னமின்மையை குறைக்கவல்லது என்பதை கண்டறிந்துளார்கள். தென்ஆப்ரிக்க மருத்துவர்களோ வாயின் உள்ளே ஏற்படக்கூடிய பூஞ்சை மற்றும் மதுவம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய நோய்களுக்கான தீர்வென தங்கள் ஆராய்சியில் கண்டறிந்துள்ளார்கள்

அம்மான்பச்சரிசிஅம்மான்பச்சரிசி (Euphorbia Thymifolia; சிற்றம்மான் பச்சரிசி) என்பது ஒரு தாவரமாகும். இதில் சிவப்பு நிறமுடை...
02/05/2018

அம்மான்பச்சரிசி

அம்மான்பச்சரிசி (Euphorbia Thymifolia; சிற்றம்மான் பச்சரிசி) என்பது ஒரு தாவரமாகும். இதில் சிவப்பு நிறமுடையது சற்று பெரியதாகவும், பச்சை நிறமுடையது சிறியதாகவும் இருக்கும். இதன் வட்டவடிவ காயில் அரிசியின் நுனிபோன்று காணப்படும். தரையோடு படரும் இனம், சிறுசெடி என இரண்டு வகைகள் உண்டு[1].
இத்தாவரம் தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள், ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் சாதாரணமாகக் காணப்படும் களைச்செடி. ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படுபவை. 50 செ.மீ. வரை உயரமாக வளரும். இலைகள் எதிரெதிராக அமைந்தவை, சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். சிறுபூக்கள் தொகுப்பாக அணுக்களில் அமைந்திருக்கும். பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடனும் காணப்படும். தாவரத்தின் எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அம்மான் பச்சரிசிக்கு சித்திரப்பாலாடை என்கிற பெயரும் உண்டு. அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.
இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.
பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும். இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.
Tamil - Amman Pacharisi
English - Snake w**d
Sanskrit – Dugdhika
Telugu - Reddine narolu
Malayalam - Nela paalai
Botanical name - Euphorbia hirta
காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் – பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு
- அகத்தியர் குணபாடம்
இத்தாவரத்தின் முழுப்பகுதியும் மருத்துவத்தில் பயன்படுகிறது. துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மையுடையது. குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும்,மலமிளக்கும், சுவாசத்தைச் சீராக்கும், இருமலைத் தணிக்கும், பெண்களுக்கு பால் சுரப்பைத் தூண்டும், விந்து ஒழுக்கை குணமாக்கும்.
அம்மான் பச்சரிசிப் பால் ஒரு அரிய மருந்தாகும். முகத்தில் தடவ முகப்பரு, எண்ணெய் பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர கால் ஆணி,பாதத்தில் ஏற்படும் பித்தவெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள்மருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும். ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணைமருந்தாக பயன்படுகிறது.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.
பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்
இதன் இலை 15 எடுத்து அரைத்து, 1 டம்ளர் பசும் மோரில் கலந்து காலை, மாலை குடித்து வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு, வெள்ளைச் சொட்டு குணமாகும். (உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும். சாதத்தில் பசும்பால் சேர்க்கலாம். டி, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்).
மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
இதன் இலையை கிள்ளினால் பால் வரும். அதைத் தடவி வர, நகச்சுற்று, முகப்பரு, பால் மரு, கால் ஆணி வலி குறையும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
இதன் இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.
இதன் இலையுடன் அதேயளவு தூதுவளை இலையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் பலப்படும்.
இதன் இலையுடன் கீழாநெல்லியிலையையும் சம அளவாகச் சேர்த்து எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு 1 டம்ளர் எருமைத் தயிரில் சாப்பிட்டு வர, உடல் எரிச்சல், நமைச்சல், மேக இரணம், தாது இழப்பு நீங்கும்.
இதன் இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.

30/04/2018

ஆடாதோடை ( (தாவர வகைப்பாடு : Adhatoda zeylanica) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
வேறு பெயர்: ஆடாதொடை, வாசை
தாவரவியல் பெயர்:Adathoda zeylanica
குடும்பம்: Acanthaceae
இச்செடி இந்திய முழுவதிலும் ஏராளமாக பயிராகின்றது.
பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர்.
சுவை: கைப்பு
தன்மை: வெப்பம்
பிரிவு: கார்ப்பு

செய்கைகள்

• கோழையகற்றி
• நுண்புழுக்கொல்லி
• சிறுநீர் பெருக்கி
• வலிநீக்கி
முக்கிய வேதிப்பொருள்கள்
• வாசிசின்
• வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின்
• வைட்டமின் சி
• கேலக்டோஸ்

இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது

பயன்படுத்தும் முறைகள் :-

1. சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
2. இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
3. இவைகளுடன் திப்பிலி, ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.
4. இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்கொடுக்க இருமல் தீரும்.
5. இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
6. ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்

Please find the growbags, pots & plants list.
29/04/2018

Please find the growbags, pots & plants list.

28/04/2018

பார்க் நர்சரி & கார்டன், இங்கு அனைத்து வகையான செடிகள்(குரோட்டன், காய்கறி, பூ மற்றும் மூலிகை), Grow bags , பூந்தொட்டிகள், நிழல் வலை(Shade net)மண்புழு உரம்(Vermicompost) , பூச்சி கொல்லி விரட்டி, வேப்பெண்ணெய் கரைசல் மற்றும் செம்மண் கலவை கிடைக்கும்

Address

35/61, 4th Avenue, Ashok Nagar
Chennai
600083

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

7358442454

Website

Alerts

Be the first to know and let us send you an email when PAARK Nursery & Gardens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PAARK Nursery & Gardens:

Share