26/07/2019
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். சாந்தியும் சமாதானமும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் சத்திய சஹாபாக்கள் மீதும் உண்டாவதாக!
திருமறை குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட இறுதி வேதமாகும்.
நேர்வழி காட்டக்கூடிய இக்குர்ஆனை இறுதி வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம் எத்தனை சத விகிதமானவர்களுக்கு குர்ஆனை ஓதத் தெரியும்? அப்படி ஓதத் தெரிந்தவர்களில் தஜ்வீத் சட்டத்தோடு ஓதத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்?
தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளை மிகவும் சிரமம் எடுத்துக் கற்றுக் கொள்ளும் நாம் ஏன் மகத்துவம் மிக்க குர்ஆனை ஓத அவசியமாக இருக்கும் அரபியை கற்க முயற்சி எடுப்பதில்லை. இது கஷ்டமான காரியம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். அல்லது தஜ்வீத் படிப்பது அத்தனை முக்கியமில்லை என எண்ணிக்கொண்டு சும்மா படித்தாலே நற்கூலி கிடைக்கும் எனவும் நினைக்கிறோம். ஆனால், குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தஜ்வீத் படிப்பது எத்தனை அவசியம் என்பதை நமக்கு அறிவிக்கின்றன.
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதைப் படிக்கின்றனர்.
திருக்குர்ஆன் 2:121
அதனால், ஓதுதல் என்றால் என்ன? அது எப்படி அருளப்பட்டதோ அதேபோல ஓதுதல், இந்த வசனம், அல்லாஹ் தன் வேதம் எப்படி ஓதப்பட வேண்டும் என விரும்புகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது.
திருத்தமாகவும் நிதானமாகவும் குர்ஆனை ஓதுதல். அல்லாஹ் கூறுகின்றான்:
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلْ الْقُرْآنَ تَرْتِيلًا
மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73:4)
وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَىٰ مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا
மனிதர்களுக்கு நீர் இதனைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இந்தக் குர்ஆனைப் படிப்படியாக அருளினோம். (17:106)
وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا
இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.” (25:32)
அரபு எழுத்துக்களை உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்துவிட்டால் இறைவன் இட்ட இந்தக் கட்டளையை நாம் நிறைவேற்றியவர்களாகி விடுவோம்.
அனைவரும் திருக்குர்ஆனை தஜ்வீத் அடிப்படையில் முறைப்படி ஓதக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நன்னோக்கத்துடனேயே "இக்ரவுல் குர்ஆன்" என்கிற தஜ்வீத் புத்தகம் திருக்குர்ஆனிலுள்ள சொற்களைக் கொண்டு தொகுக்கப்பட்டிருக்கின்றது.
அனைவரும் எளிய நடையில் புரிந்து ஓதுவதற்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.
ஆகவே இதைப்படித்து குர்ஆனை தஜ்வீத் முறையில் ஓதத் கற்றுக்கொள்வோம்.
அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதுவதற்கு வழிகாட்டக் கூடிய இக்ரவுல் குர்ஆன்' என்கிற
இச்சிறு நூலை வாசகர்களான உங்களுக்கு விளங்கிக் கொள்ள இலகுவான நடையில் தொகுத்துள்ளேன். இதன் மூலம் நீங்கள் பூரண பயன் பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பணியை ஏற்றுக் கொள்வானாக.மேலும் குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
இந்நூலின் சிறப்பம்சங்கள்
📓அரபி, ஆங்கிலம், உருது மற்றும் தமிழில் எழுதப்பட்ட தஜ்வீத் புத்தகங்களில் இருந்து முக்கிய சட்டங்களைக் கொண்டு முறையாக தொகுக்கப்பட்டுள்ளது.
📓இந்நூலில் அரபி அல்லாத, அர்த்தமற்ற வார்த்தைகள் முற்றிலும் தவிர்த்து திருக்குர்ஆனிலிருந்து 2,446 சொற்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
📓ஒவ்வொரு பாடத்திலும் தஜ்வீத் சட்டங்களின் உதாரணங்கள் குர்ஆன் வசனங்களைக் கொண்டு "அலிஃபி"ல்லிருந்து "யா" வரையுள்ள எழுத்துக்களின் சொற்களைக் கொண்டு முறையாக
தொகுக்கப்பட்டுள்ளது.
📓ஒவ்வொரு பாடத்தின் ஆரம்பத்திலும் அதன் சட்டம் மற்றும் விளக்கங்கள் தமிழில் தரப்பட்டுள்ளன. குறிப்பாக
இலகுவாக பாடங்களை விளங்கிக் கொள்ள ஒவ்வொரு பாடத்தின் சட்டங்களையும் பாட ஆரம்பத்தில் ஒரு அட்டவணை முறையாக
தொகுக்கப்பட்டுள்ளது.
📓அரபி எழுத்துக்களின் பிறப்பிடங்களை மிக எளிதில் விளங்கிக் கொள்ள வரைபடங்களை தொகுத்துள்ளோம்.(உ.ம்) ஒவ்வொரு எழுத்துக்களின் வரைபடங்களை தனித்தனியாகவும், சில இடங்களில் இணைத்தும் பல கோணங்களில் தொகுக்கப்பட்டுள்ளது.