Green Naan Nursery

Green Naan Nursery Preserves Nature

🐍🪻🌱🌿 #வீடு_மற்றும்_வயலில்_பாம்புகளின்  #நடமாட்டத்தை_கட்டுப்படுத்தும்  #செடிகளும்_மூலிகைகளும்*விவசாயிகளின் நண்பன் எனப்படு...
02/02/2025

🐍🪻🌱🌿
#வீடு_மற்றும்_வயலில்_பாம்புகளின் #நடமாட்டத்தை_கட்டுப்படுத்தும் #செடிகளும்_மூலிகைகளும்*

விவசாயிகளின் நண்பன் எனப்படும் பாம்புகள், தற்போது சரியான புரிதல் இல்லாததால் விவசாயிகளின் எதிரியாகவே பார்க்கப்படுகிறது. வயலின் ஊடே செல்லும் பாம்புகளை அடிக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பாம்புகள் மனிதர்களால் கொல்லப்படாமல் இருக்கவும், விவசாயிகள் பாம்புகளால் கடிக்கப்படாமல் இருக்கவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம். பாம்புகளை குறித்த அடிப்படை அறிவு, களைக்கட்டுப்பாடு, பாம்புகள் விரும்பாத தாவரங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் பாம்புகளால் எழும் பிரச்சினைகளை தடுக்கமுடியும். கிராமங்களில் வீடுகளில் பாம்புகள் நுழைந்துவிடாமல் இருக்க பாட்டிமார்கள் வாசலில் உப்பை தூவிவிடுவார்கள், இதனால் பாம்புகள் நடமாட்டம் குறையும் என்பது நம்பிக்கை.

ஒரு சில தாவரங்களை வயல்களில் நடவு செய்தன் பாம்புகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பாம்புகள் நம் வயலில் இனப்பெருக்கம் செய்வதையும் கட்டுப்படுத்தலாம். பல ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் சில தவாரங்கள் பாம்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துக்கின்றன என்பதை கண்டறிந்துள்ளார்கள். உதாரணமாக இந்திய சுந்தரவனக் காடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், *துளசிச் செடிகள் (Ocimum tenuiflorum)* நாகப்பாம்பு உட்பட பல பாம்புகளை விரட்டுவதில் முக்கியப் பங்களிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் *புதினா (Mint - Mentha spp)* செடிகளின் எண்ணெய் நறுமணம் பாம்புகளை விரட்டுவதாக தரவுகள் உள்ளன. *லாவெண்டர் (Lavandula angustifolia)* செடிகளும் பாம்புகளை விரட்டும், ஏனெனில் அதன் நெடியுடன் கூடிய லாவெண்டர் நறுமணத்திற்கு பாம்புகள் வருவதில்லை. *எலுமிச்சை புல் (Lemon grass)* ரகங்கள் வெளியிடும் வலுவான எலுமிச்சை வாசனை பாம்புகளை விரட்டுவதில்ம நன்கு செயல்புரிகிறது.

*பூண்டு (Allium sativum)* ஒரு இயற்கையான பாம்பு விரட்டி. பூண்டில் உள்ள சல்போனிக் அமிலம் பாம்புகளை விரட்டுகிறது. தோட்டத்தில் வாய்ப்புள்ள இடங்களில் பூண்டு நடவு செய்யலாம். பூண்டு நட வாய்ப்பு இல்லாதவர்கள் பாம்புகள் நடமாட்டம் உள்ள பகுதியில் நறுக்கிய பூண்டை உப்புநீரில் கலந்து ஊறவைத்து தெளித்து விடலாம்.

*சின்ன வெங்காயம் (Allium cepa)*, பூண்டு மற்றும் வெங்காயம் வளர்ப்பதை விட சின்ன வெங்காயம் வளர்ப்பது எளிது என்பதால் தோட்டத்தில் சின்ன வெங்காயம் வளர்ப்பது நல்லது. மேலும் வெங்காயத்தை வேகவைத்து அந்த சாற்றை வயல்களில் விடுதன் மூலம் பாம்பு நடமாட்டம் பெருமளவு கட்டுப்படுகிறது. மேலும் அழகுக்காக வளர்க்கப்படும் *Tulbaghia violacea பூண்டு* என்ற பூண்டு மனம் உடைய செடிகளையும் வளர்க்கலாம்.

*பாம்பு கற்றாழை (Sansevieria trifasciata)* எனப்படும் ஒரு வகைக் கற்றாழைச் செடிகளை பாம்புகளை கட்டுப்படும் நடவு செய்யலாம். பொதுவாக உயிர்வேலியாக பயன்படுகிறது, காற்றை சுத்தப்படுத்த கூடியது. இலை சதைப்பற்றானது, அவற்றின் கூர்மையான இலைகள் மற்றும் கசப்பான சுவை பாம்புகளுக்கு எதிராக இருக்கின்றன. எனவே இந்த செடிகளைத்தாண்டி பாம்புகள் வருவதில்லை.

*ரோஸ்மேரி (Salvia rosmarinus)* வலுவான நறுமணம் கொண்டுள்ளதால் இயற்கையான பாம்பு விரட்டியாக செயல்படுகிறது. இனிய நறுமணத்திற்காக மாலையில் கட்டப்படும் *மாசிப்பச்சை (Artemisia wallichiana)* என்றும் தாவரமும் சிறந்த பாம்பு விரட்டியாகும். இந்த தாவரங்களை வயல் வரப்போரங்கள் மற்றும் நடைபாதைகள் மேலும் பாம்பின் வழிப்பாதைகளில் நடுவதால் பாம்பின் தொல்லை பெருமளவு கட்டுப்படும்.

*முக்கியக் குறிப்பு*: மேற்கண்ட தாவரங்கள் பாம்புகளின் நடமாட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தும், எனினும் இந்த தாவரங்கள் பாம்புகளை நிச்சயமாக தடுக்கும் என்பது உறுதியில்லை. பாம்புகள் சில நேரங்களில் அந்த தாவரங்களின் வழியிலேயே கடந்து செல்லலாம். ஒவ்வொரு பாம்பு இனத்தின் தனிப்பட்ட தன்மை, அந்த பாம்பு இருக்கும் அப்போதைய நிலை, சுற்றுச்சூழல் மற்றும் அதன் பசி, தாகம் போன்ற உடல்தேவைகளினால் பாம்புகள் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு விதமாக செயல்பட வாய்ப்புள்ளது. இதனால், பாம்புகளை கட்டுப்படுத்தவும் நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வேறுசில முன்னேற்பாடுகள் செய்துகொள்வதும் அவசியமாகும்.

*களை பராமரிப்பு*: நிலத்தை ஓரளவு சுத்தமாக வைக்க வேண்டும். பாம்புகள் வயலிலேயே தங்கி இனப்பெருக்கம் செய்யும் வகையில் வயல்களை பராமரிப்பில்லாமல் விடக்கூடாது, அதாவது நமது வயலை பாம்புகள் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும், ஆனால் நமது வயலிலேயே தங்கிவிட அனுமதிக்கக்கூடாது.

*பாதுகாப்பு கருவிகள்*: வயல்வெளிகளில் மாலைவேளைகளில் மற்றும் செல்லும்போது *டார்ச்* பயன்படுத்துவது அவசியம். முக்கியமாக பாம்புகள் இனப்பெருக்க காலமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண்ணையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அதிக களைகள் இருந்தால் களைகளின் இடையே நடந்துசெல்லும்போது நீளமாக *மூங்கில்குச்சி* பயன்படுத்தி களைகளை விலக்கிவிட்டு செல்லவேண்டும். இதனால் பாம்புகள் இருந்தாலும் நம் பாதையைவிட்டு விலகிச்செல்லும்.

*பாம்பு ரகங்களை அறிதல்*: தற்போது தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் 4 பாம்புகள் மட்டுமே உயிரைக்கொல்லும் விஷம் உடையவை. *நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன்*. இந்த நான்கு பாம்புகளையும் சரியான அடையாளம் தெரிந்திருக்க வேண்டும். எனவே பாம்புகளை அடையாளம் காணும் கலையை விவசாயிகள் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக படம் எடுக்காத நாகப்பாம்பு பார்க்க சாரைப்பாம்புபோல் இருக்கும். கவனமாக பார்த்தால் தான் அது நாகம் என்பது தெரியும். அவ்வாறே கட்டுவிரியின் மற்றும் வெள்ளிக்கோல் வரையன் பாம்புகள் ஒரே மாதிரி இருக்கும், வெள்ளிக்கோல் வரையன் விஷமற்றது.

பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க எது நஞ்சுள்ள பாம்பு எது நஞ்சற்ற பாம்பு என்ற புரிதல் விவசாயிகளுக்கு அவசியம். இத தெரிந்திருந்தால் எல்லா பாம்புகளையும் அடிக்க வேண்டியதில்லை, விஷமற்ற ஒரு பாம்பு கடித்துவிட்டால் விஷப்பாம்போ என்ற அச்சப்படத் தேவையில்லை.

*உடனடி மருத்துவம்*: மேற்கண்ட நான்கு பாம்புகளில் எந்த பாம்பு கடித்தாலும் சரியான நேரத்தில் அரசு மருத்துவமனை சென்று ஆண்டி வீனம் ஊசியை போட்டுக்கொள்வதால் பாம்புகளின் நச்சை முறிக்கலாம். எனவே அருகில் உள்ள ஆன்டி வீனம் இருப்பில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவனை முகவரிகளை அறிந்திருக்க வேண்டும். பாம்புகளிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்போம், பாம்புகளையும் அழிவில் இருந்து காப்போம்.

உலகத்துலேயே  #கள்ளுக்கானதடை உள்ள மாநிலம்  #தமிழ்நாடு...! #கள்      #பனைசங்க காலத் தமிழர்களும், கள்ளும் 😍பழந்தமிழ் மக்களி...
11/12/2024

உலகத்துலேயே #கள்ளுக்கானதடை உள்ள மாநிலம் #தமிழ்நாடு...!
#கள் #பனை

சங்க காலத் தமிழர்களும், கள்ளும் 😍
பழந்தமிழ் மக்களிடையே மது, கள் அருந்தும் பழக்கம் தனிச் சிறப்புடன் விளங்கியது.
அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் காணலாம்.

போதைக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் உடல் வெம்மைக்காகவும் பழந்தமிழர் பயன்படுத்திய ‘மது’, ‘ #கள்’ ஆகியன பற்றிய குறிப்புகளை இந்நூல்கள் விரிவாகக் குறிக்கின்றன.
உள்நாட்டு மது வகைகளுடன் அயலக மது வகைகளும் பயன்படுத்தப்பட்டன. ‘யவன மது’வை மிக விருப்புடன் மகளிர் அருந்திய செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகின்றது.
மட்டு, மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர் பெற்று விளங்கும் குடிவகைகள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள், தென்னை. பனை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.
--------------------
தேக்கள் தேறல்
தேனை மூங்கில் குழாய்களில் பெய்து அதனை முதிர்விப்பார்கள். நாட்பட நாட்பட இத்தேனின் சுவை அதிகமாகும். இவ்வாறு பதனப்படுத்திச் சுவையேற்றிய மதுவே தேக்கள் தேறல் எனப்படும். குறவர்கள் இத்தகு ‘தேக்கள் தேறலை’ப் பருகிக் குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். தேனினை மூங்கில் குழாயில் ஊறல் முறைப்படி முற்ற வைக்கும் இத்’தேக்கள் தேறலை’ப் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.
------------------
தோப்பிகள்
வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட கள்ளிற்குத் ‘தோப்பிகள்’ என்று பெயர்.
இல்லடு கள்ளின் தோப்பி பருகி
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
‘தோப்பின நெல்’ என்றொரு நெல் வகையுண்டு. தற்காலத்தும் மதுரை மாவட்டத்தில் ‘தொப்பி’ என்று இது அழைக்கப்படுகின்றது. இந்தத் தொப்பி என்ற அரிசியைக் கொண்டு வீடுகளில் தயாரிக்கப்பட்டகள், ‘தோப்பிகள்’ எனப் பெயர் பெற்றிருக்க கூடும் என்று கருதுவார் டாக்டர் மா.இராசமாணிக்கனார். பன முதலிய மரங்களிலிருந்து மாறுபட்டது இந்தத் தோப்பிகள் என்பதை ‘இல்லடுகள்’ என்ற தொடர் புலப்படுத்துகிறது.
------------------
நறும்பிழி (நெல்லரிசிகள்)
தொண்டை நாட்டில் வாழ்ந்த ‘வலையர்’ என்பார் தயாரிக்கும் கள் ‘நறும்பிழி’ எனப்பட்டது. குற்றாத கொழியில் அரிசியைக் களி போல் துழாவிக் கூழாக்குவார்கள். பின் அதனை ஆறச் செய்ய, வாயகன்ற தாம்பாளம் போன்ற தட்டுப் பிழாவில் ஊற்றி ஆற்றுவர். நெல் முனையை இடித்து அக்கூழிற் கலப்பர்; கலந்த இக்கூழினை இரண்டு நாட்கள் சாடியில் ஊற்றி வைப்பர். நன்கு ஊறிய பின்பு விரலாலே அரிப்பர். இவ்வாறு அரிக்கப்படும் கள் மிகுந்த சுவையினை உடையதாக இருக்கும். நறும்பிழி எனப்படும் இக்கள்ளினை வலையர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்னும் செய்தியினைப் பெரும்பாணாற்றுப் படையில் காணலாம்.
---------------
பெண்ணைப் பிழி (பனங்கள்)
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் பனங்கள்ளைப் பருகிய செய்தி பட்டினப்பாலையில் குறிக்கப்பட்டுள்ளது.
-------------------
நறவு
நன்னனது மலைநாட்டில் வாழும் மக்கள் நடத்தும் விருந்தில் தேக்கள் தேறலையும், நறவு எனப்படும் கள்ளினையும் பரிமாறி உண்டதாகத் தெரிகிறது. ‘நறவு’ என்பது நெல்லரிசி கொண்டு அமைக்கப்பட்ட ‘கள்’ ஆகும்.
------------------------
பூக்கமழ் தேறல்
செல்வந்தர்களின் மாளிகைகளிலும் அரண்மனைகளிலும் இவ்வகை மது பருகப்பட்டது. பொற்கலசங்களில், தேக்கள் தேறல் போன்றவற்றில் இஞ்சி, குங்குமப்பூ போன்ற மணங்கமழும் பூக்களை இட்டுத் தயாரிக்கப்படுவதே ‘பூக்கமழ் தேறல்’ ஆகும். அரசர்கள் இத்தகு தேறலை உண்டு வாழ்ந்த வரலாற்றை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார்.

💥 #பனைவிவசாயம் 🌴💯 #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥💪

#பனைமரம்

பனை மரத்தில் மொத்தம் 35 வகை இருக்கின்றன. அவை,1. ஆண் பனை2. பெண் பனை3. கூந்தப்பனை4. தாளிப்பனை5. குமுதிப்பனை6.சாற்றுப்பனை7....
02/12/2024

பனை மரத்தில் மொத்தம் 35 வகை இருக்கின்றன. அவை,
1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை
35. செம்பனை
பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவு பொருட்கள் :
🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை :
🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை
வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி
விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்
வேறு பயன்பாடுகள் :
🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்
கட்டிடப்பொருட்கள் :
🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பனை உணவுப் பொருட்கள் பனைத் தொழிலாகளிடம் இருந்து நேரடி விற்பனை தமிழ் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்

12/10/2024

வனப்பரப்பை சமநிலை படுத்த 33 சதவீதம் மரங்கள் வேண்டும் இருப்பது ஆறு முதல் 19 சதவீதம் மட்டுமே ஆகையால் தான் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

ஆகையால் மரங்களை நட வேண்டும்

✍🏼🌞🔥
இன்னும் பத்து வருடங்களில் வெயில் இப்பொழுதுள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்பொழுது நம்மால் அதி வெப்பத்தை தாங்க இயலாது. பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கு சிரமம்
இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது.

நம் வீட்டைச் சுற்றி இடமிருப்பின், முடிந்த அளவிற்கு மரங்களை நடுவோம்.

*மரம் நடுவோம் இயற்கையை காப்போம்*
😇
வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்பொழுது தமிழகத்தில் 10 கோடி மரக் கன்றுகள் நட இப்பொழுதே திட்டமிடுவோம்!

மரக் கன்றுகள் உற்பத்தியாளர்கள்,
வனத் துறை,
பள்ளித் தாளாளர்கள்,
உயர் பதவிகளில் இருப்போர்,
பிரபலங்கள்,
ஆன்மீக தலைவர்கள்,
அனைத்து மதங்களின் குருமார்கள்,
கிராமத் தலைவர்கள்,
ஊர் தலைவர்கள்,
அனைத்துக் கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.

அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்.

_1 கோடி குடும்பமும்_ தலா *10 மரக் கன்றுகள்* நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மரக் கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.

இதே போல் சில வருடங்கள் தொடர்ந்து செய்தால், வரும் 2030 க்குள் தமிழகமும் குளிர்ந்து போகும்!

அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள்.
✍🏼
இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.
👌🏼
மரக் கன்றுகள் நடுங்கள்
அல்லது மரக் கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது நட உதவுங்கள்.
😇
மரக் கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்பொழுதே முன் பதிவு செய்து வைக்கவும். ✍🏼

_பொது இடங்களில்_ :-
1. புங்கன் மரம்
2. வெப்ப மரம்
3. ஆவி மரம்
4. அரச மரம்
5. குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம்

இவைகளை நன்கு வளர்ந்த கன்றுகளாகப் பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் _புங்கன்_ மரத்தை ஆடு மாடுகள் மேயாது.

_நீர் வழித் தடங்கள்_ அருகில்:-
1. பூவரசு மரம்
2. பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டுக்கு அருகிலுள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.
1. கறுவேப்பிலை
2. லட்சக் கொட்டைக் கீரை
3. தேக்கு
4. நாட்டு மா மரம்
5. நாட்டு பலா
6. நாட்டு அத்தி
7. குமிழ்
8. மகா கனி
9. மலை வேம்பு
போன்ற மரங்கள் நடலாம்

*வழிபாட்டுத் தலங்கள்*-
1. மர மல்லி
2. மகிழம் மரம்
3. மனோரஞ்சிதம்
4. பாரிஜாதம்
5. புன்னை மரம்
6. செண்பக மரம்
7. மருதாணி போன்றவற்றை நடலாம்

*2030 இல் பச்சைப் பசேல் என்ற தமிழகத்தை உருவாக்குவோம்!*
👌🏼
இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.
😇🫣😇
மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
✍🏼
மர கன்றுகள் நடுவதற்கு ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம்!
🙏🏼
வெப்ப அலைகளுக்கு எதிரான ஒரு போர் போல் தான் இதுவும்!
🌳🌳🌳🌳🌳🌳
ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்!
💪🏼
நன்றே செய்வோம்!
அதனை இன்றே துவங்குவோம்!!
🌱🪴🌱🪴🌱🪴🌱ii இயற்கையைக் காக்க உதவுங்கள்...
🌱🌱🌱🌱🌱🌱
🌳🌳🌳🌳🌳🌳

இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும்...
13/08/2024

இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாரிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் பேசும்போது ஆலமரத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம். வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் ‘பனியாவே’ – ஆங்கிலத்தில் மரத்தின் பெயரானது. இதுவே ‘பானியன் ட்ரீ’ என்று பெயர் வந்த வரலாறு.

கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக் கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இதை அடர்ந்த காடாகக் காணலாம். கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் நிறைய உண்டு. உலகிலேயே பெரிய ஆலமரம் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் உள்ளது (ஹீக்ளி நதியில் கட்டப்பட்டுள்ள ஹெளரா இரும்புப் பாலத்தைக் கடந்து சென்று பார்க்கலாம்.) 1782-இல் ஒரு ஈச்சமரத்தில் முளைத்து வளர்ந்த இந்த ஆலமரம் ஒன்றரை ஏக்கர் பரப்பிற்கு விழுதுகளை இறக்கிக் கிழக்கு மேற்காக சுமார் 400 அடியும் தெற்கு வடக்கில் சுமார் 300 அடியும் பரவி இதன் சுற்றளவு சுமார் 2000 அடி என்று சொல்லுகிறார்கள்.

ஆலமரம் விழுது இறக்கி நிற்கும் காட்சி பற்றி பிளினி (கி.பி. 70) இவ்வாறு எழுதுகிறான். பண்டைய இந்திய வரலாற்றுக்குப் பிளினியின் குறிப்பு மிகவும் ஆதாரமானது. “இந்தியாவில் உள்ள ஒரு மரத்திற்கு அது தனக்குத்தானே நடவு செய்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. பூமியின் மீது தன் வலுவான கரங்களை நீட்டிப் பரப்பிக்கொண்டு குடைவிரிக்கிறது. ஓராண்டுக்குள் வேர்களை ஊன்றிக்கொண்டு (விழுது இறங்குவது) புதிய வேரைக் கிளையிலிருந்து மீண்டும் மீண்டும் இறக்கிய வண்ணம் வானில் படர்கிறது.”

கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குரிய சுரபாலர் விருக்ஷ ஆயுர்வேத நூலில் ஒரு நுட்பமான வைதீகக் குறிப்பு உள்ளது. ’சாத்திர முறைப்படி யார் இரண்டு ஆலமரங்களை நடுகின்றாரோ அவருக்குக் கைலாயத்தில் ஒரு இடம். கூடவே கந்தர்வக்கன்னியரின் கவனிப்பும் கிடைக்கும்.’ (பாடல் 13) ‘வீட்டின் கிழக்கில் ஆலமரம் நட்டால் வேண்டிய வரம் கிட்டும்’ (பாடல் 24). காலையில் கிழக்கு வெயில் சுட்டெரிக்கும். ஆகவே நெடிய நிழல் வீட்டில் விழ கிழக்கே ஆலமரம்.

31/10/2023

சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா?!

★சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக உணவும் கிடையாது, தண்ணீரும் குடிப்பதில்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அவரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.
★ஒரே அரையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து உணவும் தண்ணீர் கொடுக்காமல் அவரை பரிசோதனை செய்துவிட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார். தண்ணீர் உணவு சாப்பிடாத காரணத்தால் மலம் வராது எந்த கழிவும் வராது . ஆனால் சிறுநீர் வரும். அப்படி என்றால் தண்ணீர் குடிக்க மாட்டார் சிறுநீர் மட்டும் எப்படி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்பார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் நான் தண்ணீர் குடிப்பதில்லைதான் ஆனால் தண்ணீரை வாய் வழியாக குடிப்பதில்லையே தவிர உடம்பு atmospheric என்று சொல்ல கூடிய வளிமண்டலத்தில் இருக்க கூடிய நீர் ஆவியை தானாகவே உறிஞ்சி கொள்வேன்.
★சாதாரண ஒரு மரம் 14 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 14 லிட்டர் தண்ணீரையே வளிமண்டலத்தில் எடுத்து கொள்கிறது என்று சொன்னால் மனித உடம்பிற்கு தேவையானது 1 1/2 லிட்டர் தான் , ஏன் அது எடுக்காது என்று சூரிய யோகி கேட்பார். உண்மையாக அவரை பரிசோதனை செய்தவர்கள் எப்போதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல் வெளியில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் என்று கண்டுபிடித்தார்கள்.
★இந்த உடம்பே நீர் ஆவியை உறிஞ்சுகிற அளவிற்கு உறிஞ்சும் சக்தி இருக்கிறது. ஆற்றல் குறையும்!!!!. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்து செல்வார். அவர் வேகத்திற்கு நம்மால் நடக்கவும் முடியாது. கழிவு வெளியேற்றமும் கிடையாது. உணவும் தேவையில்லை. கையில் பணம் எடுத்து கொள்ளாமல் வெரும் கையோடு போவார். டீ குடிப்பதற்கு கூட 5 ரூபாய் வேண்டும். நாளு பேர் கிட்ட கை நீட்டி பிச்சையாவது எடுக்கனும். எதுவுமே தேவையில்லைலைனா!!!!!!!!. அவரை வீட்டுக்கு வரவேற்று மறியாதையா தண்ணீர் கொடுக்கிறேன் என்று கூட சொல்ல முடியாது.
★ அப்படினா தனக்கு தேவையானதை ஐம்புலன்களில் இருந்து உறிஞ்சி கொள்ளுதல் அந்த அளவிற்கு இந்த உடம்பில் ஆற்றல் உள்ளது என்பதை அந்த சூரிய யோகி நிரூபித்து உள்ளார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இப்போது கல்கத்தாவில் இருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு நினைத்தால் வந்துவிடுவார். வந்து சும்மா ஒரு நாள் கூடவே இருந்து சூரிய சக்தியை எப்படி ஈர்ப்பது என்று கற்றுத்தருகிறார்.
★செல்போனுக்கு battery down ஆகும் போது charge செய்வது போல மனிதனுக்கும் சக்தி குறையும் போது கண்களின் மூலமாக சூரியனில் இருந்து charge செய்துகொள்ளலாம்.
★ உயிரையும் மனதையும் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அதை பார்கலாம்.
★சூரிய தியானம் செய்துவிட்டு கண்களை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது உயிர் என்பது ஜோதி வடிவத்தில் தெரியும். உயிர் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மிக மிக பொருள். ஒரு பசு மாட்டின் ரோமத்தை எடுத்து 1000 துண்டுகளாக வெட்டி அந்த ஆயிரம் துண்டில் ஒரு துண்டை எடுத்து 10000 துண்டுகளாக வெட்டி கிடைக்கும் ஒரு துண்டின் அளவே உயிர். இதுவே இறைதுகள், பரமணு, வெட்டவெளி, கடவுள்துகள், சுத்தவெளி என பல பெயர்களில் கூறப்படுகிறது.
★உயிரின் படர்க்கை நிலையே மனம். உயிரில் இருந்து வெளிபடும் சீவகாந்த ஆற்றலே மனமாக இயங்குகிறது. சூரிய தியானம் செய்துவிட்டு கண்ணை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது மனம் என்பது spiral shape ல் சுற்றும். யார் வேண்டுமானாலும் மனதையும் உயிரையும் பார்க்கலாம்.
★உணவு தேவைப்பட்டால் தான் காசு தேவை உணவே தேவையில்லை என்றால் பணம் என்ற அத்தியாவசிய தேவையே இல்லாமல் போய்விடும்.

மரங்களின் சிறப்புகள் பற்றியும்!!! மரங்களின் பயன்கள் குறித்து விளக்கும் கட்டுரை!!!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐பத்து...
21/09/2023

மரங்களின் சிறப்புகள் பற்றியும்!!! மரங்களின் பயன்கள் குறித்து விளக்கும் கட்டுரை!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம், பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்.

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும் நல் மரங்களை நடுகின்றாரோ அவரிடம்
தேவதைகளும் முனிவர்களும் கந்தர்வர்களும் மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்.

‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீ.கிருஷ்ணன் கூறுகிறார்.

ஒரு *அரச மரம்* நட்டால் ஒரு ஆண்டு சொர்க்கலோக பதவி கிட்டும் என்று *விருஷ ஆயுர் வேதத்தில்* குறிப்பிடப் பட்டுள்ளது.

அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்ற சொல்லி இருப்பதில் மருத்துவ காரணங்கள் உள்ளன.
அரச மரத்தின் அதிக பிராண வாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது, அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது.

*புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே.

அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கி னார்கள்.

*ஆல மரம்* வாக்கின் அடையாளம். அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான *பனியாக்கள்* அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள். அதன் காரணமாகவே
அது ஆங்கிலத்தில் *பான்யன் ட்ரீ* என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை. அதனால் ஆல மரங்களை நிறைய வளர்க்க வேண்டும்.
சாஸ்திர முறைப்படி இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில் ஒரு இடமும் கூடவே கந்தர்வ கன்னியரும் கிடைப்பார்கள் என்றும் *விருஷ ஆயுர்வேதம்* நூல் சொல்கிறது.

மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக *இலுப்பை மரத்தையும்* அது ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது.
தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது.

அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி
ரைட்ஸ் உருவானது.

நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப்பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.

நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் *அசோக மரங்களாக* கருதப் படுகின்றன. *உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு* தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.

*இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும் பிரமிப்பையும் அளிக்கின்றன.* தமிழ் நாட்டில் பெய்த மழை அளவிலேயே அதிகமாக பெய்த இடம் திருஆலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும், ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான். நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்பமரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.

புங்கை மரத்தை அதிகம் வளர்ப்பதினால் தமிழ் நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கை எண்ணெய் தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் அதே நேரத்தில் மழையையும் பெற்றுத் தரும் போன்ற தகவல்கள் தமிழ் நாடு அரசு அவசியம் கவனிக்க வேண்டியவை.

*ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி அருகருகே நட்டுக் கூடவே ஐந்து மாமரங்களையும் நடுவோர் நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று *விருஷ ஆயுர்வேதம்* சுட்டுகிறது.

அந்தக் காலத்தில் இவை போன்ற சுலோகங்கள் மூலமாகவே சூழலியலைப் போற்றி வளர்த்து இருக்கிறார்கள்.

சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நாம் வாழும் சூழலே என்பதையும் நம் வாரிசுகளின் நன்மைக்காகவே இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும் அவை உணர்த்துகின்றன. மரம் வளர்ப்பதினால் சொர்க்கத்தையும் நம் வாரிசுகளை மரமில்லாத நீரில்லாத மாசடைந்த நரகங்களில் இருந்தும் காக்கிறோம். தில்லை அம்பலமான சிதம்பரத்தின் தல விருட்சம் தில்லை என்னும் மரம். இன்று அம்பலத்தில் நடராஜர் மட்டுமே ஆடுகிறார். ஆனால் தில்லை மரங்கள் மட்டும் அம்பேல் ஆகி விட்டது.

தில்லை மரம் ஒரு பாலுணர்வு ஊக்கி மரம் மேலும் அவற்றை அலையாற்றி மரங்களாக கடற்கரைகளில் வளர்த்தால் அவை சுனாமி தடுப்பாகவும் எரிசக்தி அளிக்கும் வளங்களாகவும் அமையும்.

*செஞ்சந்தன மரம்* அணுக்கதிர் வீச்சைத் தடுக்க வல்லது என்றும் *மோசஸ், சினாய் ஏரியில்* வீசி எறிந்து நீரைத் தூய்மை செய்த மரத்தடி செஞ்சந்தன மரமாகவே இருக்க வேண்டும்.
கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில் ஒரு பாதுகாப்பிற்காக செஞ்சந்தன மரத்தை அதிகம் நடலாம்.

நாம் அதிகம் அறிந்திராத கண்டிராத மரங்களான *மருதம், சேராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம், வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நொச்சி, வேள்வேல், தழுதாழை, ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங் கொட்டை, எட்டி, இயல்வாகை ஆகிய அரிய வகை மரங்களின்
மருத்துவ, சுற்றுச் சூழல் முக்கியத்துவங்களை அறிந்து நாம் அவற்றை அதிக அளவில் வளர்த்து மீட்டெடுக்க வேண்டும்.

மரங்களை பொறுத்து
அதன் தன்மையை சுருக்கமாக அறியலாம்.

*நெல்லி* - இந்தியாவின் எதிர்காலம்,

*மருதம்* - இதய நோய் நீக்கி,

*வெப்பாலை* - பல நோய் நிவாரணி,

*முருங்கை* - தாது புஷ்டி மரம்,

*வேள்வேல்* - மேக நிவாரணி,

*கொய்யா* - ஏழைகளின் ஆப்பிள்,

*கருங்காலி* - கருப்பு வைரம்

*தொகுப்பு: வாழ்வு தரும் மரங்கள்*

இயற்கையை அழிக்கலாமா ? உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டிருக்கிறது எனினும்   இங்கு மட்டுமே  47...
28/07/2023

இயற்கையை அழிக்கலாமா ? உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டிருக்கிறது எனினும் இங்கு மட்டுமே 47,513 தாவர வகைகள் இருக்கின்றன. அதாவது உலகில் இதுவரை அறியப்பட்ட சுமார் 0.4 மில்லியன் தாவரங்களில், 11.4% இந்தியாவில் இருக்கின்றது.இவற்றில் 28% இந்தியாவில் மட்டுமே காணப்படும் எண்டெமிக் வகையை சேர்ந்தவை.

உலகின் மலரும் வகை தாவரங்களில் 6% இந்தியாவில் இருக்கிறது. பலவகையான அரிய தாவரங்களை கொண்டிருப்பதால் உலகின் மூலிகைப் பூங்கா என்று அழைக்கப்படும் இந்தியாவின் வளங்களிலிருந்து பல தாவரங்களை கடந்த காலங்களில் முழுவதுமாக இழந்திருக்கிறோம் மேலும் பல அரிய தாவரங்கள் மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன.

நகரமயமாக்கல், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாவது சுரங்கங்கள் உள்ளிட்ட காரணங்களினால் மட்டுமல்லாது தாவரகுருடினாலும் இவை அழியும் அபாயத்தில் உள்ளன.

பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்க பட்டிருக்கின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும் அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது இப்படி கடுமையான சட்டங்கள் மூலம் தாவரங்கள் பாதுகாக்கப்படவேண்டிய வந்ததே தாவரக் குருட்டுத்தன்மையால்தான்

1999ல் தான் J. H. Wandersee & E. E. Schussler என்னும் இரு அமெரிக்க தாவரவியலாளர்களால் தாவர குருடு ’’plant blindness’’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது.

இப்போதைய விரைவான வாழ்க்கையில் நிலவோ மழையோ வெயிலோ நம்மை கடக்கும் சிறு பறவைகளோ எதையும் கவனிக்க நேரமில்லாதவர்களாகிப்போன நம்மில் பலரும் மிக நெருக்கடியான சாலை போக்குவரத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் போது கூட சாலையோரங்களில் நிழலும் குளிர்ச்சியும் அளிக்கும், அழகிய மலர்களுடன் கண்ணைக்கவரும் படி நின்றிருக்கும் பலவிதமான மரம், செடி கொடிகளை கவனிப்பதில்லை.

சாலை விரிவாக்கத்தின் பேரில் பெருமரங்கள் இயந்திர ரம்பங்கள் கொண்டு வெட்டி அகற்றப் படுகையிலும் அங்கே சாலையை கடக்க காத்திருப்போர் பல வருடங்கள் வளர்ந்து பயன் தந்து கொண்டிருந்த மரங்களை இழப்பதைக் குறித்தும், அங்கு நடப்பது படுகொலைக்கு சமம் என்பதையும் உணர்வதில்லை. மரங்களும் உயிருள்ளவைதான்.அவை ரத்தம் பெருக்கி கதறுவதில்லை எனவே அவற்றை அழிப்பது யார் கவனத்துக்கும் வருவதில்லை.

கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கும் பலரில் ஒருவர் கூட பல நூறு மரங்கள் வெட்டப்படுகையில் அதை கண்டிக்க நினைப்பதில்லை. ஏனெனில் குடிநீருக்கும் மரங்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் நேரடி தொடர்பு தெரியாத அளவிற்கு தாவர குருடாக இருப்பதுதான்

தாவர குருடு என்பது நாம் முழுக்க முழுக்க நமது அடிப்படை தேவைகளுக்கு சார்ந்திருக்கும் தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காதது, நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களை கவனிக்காதது, முக்கியத்துவத்தை உணராமல் அழிப்பது, அவற்றை பாதுகாப்பதன் அவசியம் அறியாதது ஆகியவையே…!

நாமனைவரும் தெரிந்தும் தெரியாமலும் இயற்கையுடனான நமது தொடர்பை துண்டித்து கொண்டிருக்கிறோம். அடுக்கக வாழ்க்கையில் இயற்கையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இல்லை. நவீனமய வாழ்வின் விசையால் இழுக்கப்படும் கிராமப்புற மனிதர்களுக்கும் இவற்றை அறிந்து கொள்ள அவகாசம் இருப்பதில்லை

நம் அன்றாட வாழ்வில் ஒரே ஒரு நாள் கூட உணவு, இருப்பிடம், மருந்து, குடிநீர், காற்று, போன்ற தாவரங்களினால் மட்டுமே கிடைக்கும் பயன்களை அனுபவிக்காமல் கழிவதில்லை. எனினும் அவற்றை குறித்த அறிவு நமக்கு இருப்பதே இல்லை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

பூமியில் இவ்வுயிரினங்கள் நிலைபெற்று வாழ மழை, காற்று, தீ, நிலம், நீர் போன்ற பஞ்சபூதங்களையும் கொண்டமைந்துள்ளது. இந்த இயற்கையானது செழித்து விளங்காவிட்டால் மனித இனமானது அழிவுற்றுவிடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கட்டுரையாளர்; லோகமாதேவி

எங்களிடம் மாடி தோட்டத்திற்கு தேவையான தொட்டிகள் ( Fiber Material ), Nutrition fillings, coco pith, மீன் அமிலம், ஆர்கானிக்...
26/02/2021

எங்களிடம் மாடி தோட்டத்திற்கு தேவையான தொட்டிகள் ( Fiber Material ), Nutrition fillings, coco pith, மீன் அமிலம், ஆர்கானிக் உரக்கலவை போன்றவைகள் கிடைக்கும்..

தொடர்புக்கு - 70929 79091

01/01/2021

Address

Marakkanam
604303

Telephone

+919360372527

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Naan Nursery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Naan Nursery:

Share