23/10/2023
வீடு கட்டுமானம் பற்றி அறிய வேண்டியவை என்ன?
முன்னுரை. எலி வளையானுலும் தனி வளையாக இருக்கனும் என்னும் பழமொழிக்கேற்ப எல்லோருக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது ஒரு முக்கிய கனவாக இருக்கும். அது கனவாகவே இல்லாமல் நிஜத்தில் சாத்தியமாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த பதிவு.
சொந்த வீடு என்பது ஒரு பெரிய சப்ஜெக்ட். அதனால் சொந்தமாக ஒரு காலி இடம் வைத்திருப்பவர்கள் அதில் தனக்கு மட்டும் ஒரு தனி வீடாக கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இப்பதிவை எழுதியுள்ளேன்.
கட்டடப் பொறியாளரோ பிஃளாட் பிரமோட்டோரோ இவற்றிலிருந்து மாறுபடலாம். ஆனாலும் நாங்கள் வீடுகள் கட்டிய அனுபவத்தில் கற்றுக்கொண்டவையை ஒரு consumer பார்வையில் இந்த பதிவை எழுதியுள்ளேன்.
1. இடம்: முதலில் உங்களுக்கு ஒரு சொந்த இடம் வேண்டும். அதை ஏற்கனவே வாங்கியிருந்தாலும் சரி, பிதுராஜித சொத்தாக இருந்தாலும் சரி, அந்த இடத்தின் டாக்குமெண்ட்ஸ் பக்காவாக இருக்க வேண்டும். அது உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினர் பெயரிலோ இருப்பது உசிதம். மேலும் புறம்போக்கு இடம் போன்று இல்லாமல், பின்னாளில் கவர்ன்மென்ட் எடுத்துக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளோ இல்லாமல் வீட்டுப் பிளான் சாங்க்ஷன் ஆவதில் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் உள்ள இடம்தான் என்பதை உறுதிப்படுத்துக்கொள்ள வேண்டும்.
2. மண் பரிசோதனை: பிறகு ஒரு தரமான மண் பரிசோதனை கூடம் மூலம் அவ்விடத்தில் உள்ள மண்ணை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் பின்னால் கட்டடத்திற்கு structural damage ஆவதை தடுக்க முடியும். மேலும் எப்பிடிப்பட்ட பவுண்டேசன் போடுவது நல்லது என்று முடிவு எடுப்பதும் சுலபம்.
3. ஆர்க்கிடெக்ட்: நாம் கட்டப்போகும் கட்டிடத்திற்கு நமக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமான நபர் இந்த ஆர்க்கிடெக்ட் (Architect). கட்டடத்தை வடிவமைப்பு செய்யும் பொறியாளர். ஒரு சரியான, திறமையான, நேர்மையான ஆர்க்கிடெக்ட்டை மட்டும் நாம் தேர்தெடுத்து விட்டோமானால் நமது வேலை பாதி முடிந்ததாக நினைத்துக்கொள்ளலாம்.
இப்படியான முக்கியமான நபரை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பது மிக அவசியம். அந்த ஆர்க்கிடெக்ட் என்பவர் B Arch (or) M Arch படித்தவராகவும் குறைத்த பட்ச அனுபவம் உள்ளவராகவும், இந்த தொழிலில் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி, மற்றும் அனுபவம் பெற்றவராகவும், எல்லாவற்றிக்கும் மேலாக நியாயப்படி நடப்பவராகவும் இருப்பது நல்லது. அவரை confirm பண்ணுவதற்கு முன்னால் அவரால் வடிவமைப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை நீங்கள் பார்ப்பது நல்லது. ஒரு ஐடியா கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு திறமையான ஆர்க்கிடெக்ட்டை தேர்ந்தெடுத்த பின் அவரோடு உங்கள் குடும்பத்தோடு ஒரு முறைக்கு பல முறை சந்தித்து உங்க தற்போதைய தேவை, எதிர்கால தேவை, உங்கள் பட்ஜெட், உங்க வீடு எப்பிடி அமைய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும். இந்த விவாதங்களில் உங்க மனைவியையும் ஈடுபாடு கொள்ளச் சொல்லுங்கள். ஏனெனில் அவர்கள்தான் அந்த வீட்டை பராமரிக்க போகிறவர்கள். (And also only wives can convert a house into a home) ,இந்த விவாதங்களில் ஆர்க்கிடெக்ட் சம்பளம் எவ்வளவு என்று முடிவு செய்து விட வேண்டும். அது சராசரியாக உங்க வீட்டின் மொத்த பட்ஜெட்டில் 5 முதல் 10 சதவிகிதமாக இருக்கலாம்.
இந்த சம்பளத்திற்கு ஆர்க்கிடெக்ட் செய்ய வேண்டிய வேலைகள்.
1. Hose Desighn
2. Civil Engineer, Structural engineer, Electrical consultant, Plumbing consultant, Interior designer போன்றவர்களை ஏற்பாடு செய்து கொடுத்தல், அவர்கள் தம் துறையில் செய்யக்கூடிய டிஸைன்களை coordinate பண்ணுதல்.
3. வீடு கட்ட ஆகும் செலவை சரியான முறையில் திட்டமிட்டு நமக்கு சொல்லுதல்.
4. மற்றும் எல்லா துறையிலும் செய்யப்படும் வேலைகளை கண்காணிப்பு செய்தல் போன்றவை.
4. அடுத்த கட்ட நடவடிக்கை: வீட்டு டிஸைன் முடிந்த பின் corporation அல்லது, municipality பிளானிங் பர்மிஷன் வாங்க வேண்டும். இது வாங்காமல் கட்டடம் கட்ட ஆரம்பிக்கவே கூடாது. ஆர்க்கிடெக்ட் வீட்டு வடிவமைப்பு செய்து முடித்த பின் அந்த டிராயிங்கை structural engineer இடம் கொடுத்து கட்டடத்துக்கு வேண்டிய தூண்கள், அஸ்திவாரம், தளங்கள் போன்றவற்றை டிஸைன் செய்ய வேண்டும்.
பின்னர்
- interior designer இடம் கொடுத்து வீட்டின் உள் கட்டமைப்புகளை (Interior design) டிஸைன் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர்
- electrical consultant மூலம் வீட்டின் மின்சாரம் சம்பந்தப்பட்ட சகல டிஸைன்களையும் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு
- Plumbing consultant மூலம் வீட்டின் நீர்த்தேவைகள், மேல்நிலை தொட்டி, தரை நிலை சம்ப், செப்டிக் டேங்க், தண்ணீர் பைப்புகள், பாத்ரும் பிட்டிங்கள் போன்ற வற்றை டிஸைன் செய்து முடிவு செய்து கொள்ள வேண்டும்
இவையெல்லாம் முடிந்த பின், ஆர்க்கிடெக்ட் உதவியுடன் ஒரு நல்ல சிவில் பொறியியல் வல்லுனரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆர்க்கிடெக்ட் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு civil engineer ம் முக்கியமானவரே. ஏனென்றால் பிளான் என்னதான் அற்புதமாக போட்டாலும், அதற்கு செயல் வடிவம் கொடுப்பது சிவில் என்ஜினியர்தான். அதனால் ஒரு நல்ல திறமையான, அனுபவமிக்க என்ஜினியரை ஆர்க்கிடெக்ட் உதவியுடன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஆர்க்கிடெக்ட்டுக்கும் சிவில் என்ஜினியருக்கும் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருப்பது நல்லது. இருவரும் ஒருவரோடு ஒத்துழைப்பு செய்வது மிக அவசியம். இல்லையெனில் இவர் ஒன்னைச் சொல்ல மற்றவர் வேறு மாதிரி செயல்படுத்தினால் நமக்குத்தான் மண்டைக்குடைச்சல். கட்டிடமும் சரியாக வராது. அப்புறம் முக்கியமான விஷயம் இரண்டு இருக்கிறது.
பிளானை நன்கு ஆலோசித்து முடிவு பண்ணின பிறகு எக்காரணம் கொண்டும் அதை மாற்றக்கூடாது.
முதலிலேயே பட்ஜெட் போட்டு விட்டு அதற்கு தேவையான முழுப்பணத்திற்கும் (சொந்த பணம், தனியார் கடன், பாங்க் லோன் மூலமாக) ஏற்பாடு செய்த பிறகே பூமி பூஜை போட்டு கட்டிட வேலைகளை துவங்க வேண்டும்.
கட்டிட வேலைகள் துவங்கிய பின் நமது முழு கவனமும் அதில் இருக்கவேண்டும். கட்டிட வேலைகள் மட்டும் ரிமோட் கண்ட்ரோலில் செய்யக்கூடாது.
எல்லா முக்கிய சந்தர்ப்பங்களிலும் ஆர்க்கிடெக்டை கட்டிடம் நடக்கும் இடத்திற்கு வரவழைத்து செக் செய்ய சொல்லவேண்டும்.
நாம் கட்டட பொருட்கள் வாங்கிக்கொடுத்தாலும் அல்லது அந்தந்த துறை காண்டிராக்டர்கள் வாங்கினாலும் நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்கள்தான் உபயோகப்படுத்தப்படுகின்றதா என்பதை நாமே கண்கொத்திப் பாம்பாக செக் செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
முடிவுரை:
இடம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் சரியாக இருக்க வேண்டும்.
இடத்தில் மண் பரிசோதனை அவசியம் செய்யவும்.
ஒரு நல்ல ஆர்க்கிடெக்ட் தேர்ந்தெடுக்கவும்.
-பிளான் முடிவு செய்யவும்.
- Structural engineering drawings, Interior design drawings, Electrical drawings, Plumbing drawings, civil drawings ஆகியவற்றை முடிவு செய்யவும்.
- கவர்ன்மெண்ட் பிளான் சாங்க்ஷன் வாங்கவும்.
- முழுப்பணத்திற்கும் ஏற்பாடு செய்து கொள்ளவும்.
- ஒரு நல்ல, திறமையான சிவில் என்ஜினியரை தேர்ந்தெடுக்கவும்.
- எலக்டிரிகல், பிளம்ப்பிங்க், உள் கட்டமைப்பு ஆகிய துறைகளில் நல்ல காண்டிராக்டரையும் தேர்தெடுத்துக்கொள்ளவும்.
அப்புறமென்ன?
A BIG go ahead towards BUILDing your dream come true home…
BUG BUILD will be there to support all along in achieving your dream home project.