26/12/2012
இது என்ன நியாயம்| அமைதிக்கு பெயர் பெற்ற எனது ஊர் குலசேகரம். இன்று போர்களமானது, என் அருமை நண்பர்களே! நீங்கள் சிந்திக்க வேண்டும், நானும் ஒரு இந்து மதத்தில் பிறந்தவன் தான், இந்து மதத்தின் புனிதத்தை அறிந்தவன் தான், ஆனால் அனைவரையும் நேசிக்க பழகியிருக்கிறேன். நமது தாய்திருநாட்டின் சிறந்த பிரதமர்களில் ஒருவர்தான் ABவாஜ்பாய், இதில் எந்த ஐயமும் இல்லை, ஆனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் புதிதாக அவரது பிறந்த நாளை கொண்டாடும் பெயரில் சில நல்லவர்கள் மக்களை ஏமாற்றி, நமது கிறிஸ்தவ சகோதரர்களின் மிகப்பெரியதும், மிகப்புனிதமுமான கிறிஸ்துமஸ் விழாவினை சீர்குலைக்கும் நோக்கில் A.B.V அவரது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். இந்த செய்தியை A.B.V அவர்கள் அறிந்தால், அவரே இதற்கு சம்மதம் அளித்திருக்க மாட்டார். நாட்டில் நண்பர்கள் நாம் சாதி மதம் இவற்றை மறந்து நட்பு பாராட்டி வருகிறோம். இவர்களை போன்ற சில விஷமிகளால் நமது ஒற்றுமையும், ஒருமைப்பாடும், இறையாண்மையும் சிதைந்து விடும். ஆதலால் மத வெறியை தூண்டுவோரை, தாண்டி நாம் ஒற்றுமையுடன் வாழ உறுதி எற்போம். மதவாதிகளை வெறுப்போம். நாம் அனைவருக்கும் மத உணர்வு இருக்கலாம், ஆனால் அது வெறி ஆக கூடாது. "இளைஞர்களே ஒன்றுபடுங்கள்! மதமில்லா இந்தியாவை உருவாக்குவோம்!" ஜெய்ஹிந்த்