17/06/2021
CONSTRUCTIONS
#📞Phone 8940425272
- 9566442238
Er. N. Mohamed aseek B.e.,
புதிய RCC Slab ல் பாத்தி கட்டி நீர் தேக்கும் சோதனை எதற்கு?
Roof slab concrete போட்டதும் மறுநாளில் இருந்து 21 நாட்களுக்கு சிமெண்ட் மணல் கலவை கொண்டு பாத்தி கட்டி உப்பில்லாத நல்ல நீர் தேங்க விட வேண்டும், அப்போது தான் காங்க்ரீட் நன்கு வலுவடையும், கட்டிடத்தில் நீர் கசிவு சோதனை முழுமையடையும், பாத்தி கட்டும் போது roof slab edge ல் இருந்து துவக்கி பாத்தி கட்ட வேண்டும், எக்காரணம் கொண்டும் உள்ளே தள்ளி கட்டக்கூடாது ,இதனால் roof slab ஓரம் காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுவிடும்,காங்க்ரீட் விண்டு பெயர்ந்து விழும், பின்னாட்களில் பெருமழையின் போது சுவரில் ஓதம் ஏற்படும்.
கான்கிரீட்டில் உள்ள முக்கியமான இடுபொருள் தண்ணீர். காங்க்ரீட் இறுகுகையில் இந்தத் தண்ணீர் ஆவியாகும், நீர் இருந்த இடங்களில் வெற்றிடம் உருவாகும். எனவே காங்ரீட்டை தொடர்ந்து நீராட்டுறோம்.
இப்படி கான்கிரீட்டுக்குள்ளும் புகும் நீர் சிமென்ட்டில் உள்ள கால்சியம் சிலிகேட் எனும் வேதிப் பொருளுடன் சேரும். இதன் விளைவாக கரிப்பொருள், கந்தகம், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களின் கூட்டில் ஒரு பசை உருவாகும்.
இந்தப் பசை ஏற்கெனவே ஆவியான நீர் ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடங்களை சென்று நிரப்பும். இந்தப் பசை நாளடைவில் கட்டியாகும். இது கான்கிரீட்டை வலுவாக்கும். அதற்கு நீடித்த ஆயுளையும் வழங்கும். இந்த நீராட்டுதல் முறையாக நடக்காவிட்டால் காங்க்ரீட்டில் வெற்றிடங்கள் முழுமையாக நிரம்பாது.
அந்த காங்க்கிரீட் குறைபட்டதாகவே இருக்கும். பிற்பாடு ஒருபோதும் வலுப்படுத்த முடியாது , பலம் குறையும். காற்று உட்புகும். விரிசல்கள் நேரும்,வெறும் இருபது வருடங்களில் கம்பிகளில் துருவேறும், கட்டுமானத்தின் ஆயுளும் குறையும். ஆகவே, curing என்ற நீராட்டுதல் முறையாக நடந்தால் மட்டுமே கட்டுமானம் வலுவுறும்.
ஒரு வாரம் கழித்து roof மற்றும் ,beams களில் sides மட்டும் பிரிக்கலாம்,
3 வாரங்கள் கழித்தே slab மற்றும் beams ல் bottom சென்டரிங் formwork பிரிக்க வேண்டும், பத்தடிக்கு குறைந்த span களில் 14 நாட்களில் bottom பிரிக்கலாம், இதில் அவசரம் கூடாது,
பாத்தி கட்டி நீர் தேக்கினால் மட்டுமே ஸ்லாப் அடியில் எங்கேனும் கசிவிருந்தால் முன்கூட்டியே அதற்கேற்ப தகுந்த வாட்டர் ப்ரூஃபிங் செய்து சரி செய்ய முடியும்,
ஒரு நல்ல நேர்த்தியான பணியை குறுக்கு வழியில் செய்யவே முடியாது, குறுக்கு வழியில் நேரத்தை மிச்சப்படுத்த இப்படி செய்வது நம்பி வேலை தந்த வாடிக்கையாளருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது போன்ற செயல்
மேலும் தொடர்புக்கு
உங்கள் கணவு இல்லத்தை கட்டிட வல்லுநர் மற்றும் பொறியாளர் வடிவமைப்பில் கட்டிட அனுகவும்
# NFM CONSTRUCTIONS
📞Phone 8940425272
𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 :- 9566442238