KSR Enterprises TNJ

KSR Enterprises TNJ Home safety, security and very useful rare things available at admirable rates.

09/12/2015

மூன்று வருடங்களுக்கு முன்னால் சென்னை பிடிக்காமல் வெளியேறினேன். . !!!

இப்போது கடந்த ஒரு வாரம் சென்னையில் இருந்து என்னால் இயன்றதை செய்ய முடியவில்லையே என எண்ணி மனம் வருந்துகிறேன். .!!

உதவும் தனார்வலர்களை கண்டு தலை வணங்குகிறேன் . .! உங்கள் நேசம் கண்டு உள்ளம் நெகிழ்கிறேன் . .!!

off to you Volunteers . .!!

ஜபுவா (மத்திய பிரதேசம்): உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் இதுவரை 80 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர்...
12/09/2015

ஜபுவா (மத்திய பிரதேசம்): உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் இதுவரை 80 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோக சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவு விடுதியில் இன்று (12/09/2015 ) காலை 8.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. சிலிண்டர் விபத்தால் அருகிலுள்ள கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளதோடு, பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் கூறுகையில், "சிலிண்டர் வெடித்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும் அதன் காரணமாக உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது" என்றார்.

சிலிண்டர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போது எங்களது " KSR GAS LEAK ALARM" - Snap deal லிலும் கிடைக்கிறது. .!!அறிமுக சலுகையாக எமது " KSR GAS LEAK ALARM" - யை...
08/06/2015

தற்போது எங்களது " KSR GAS LEAK ALARM" - Snap deal லிலும் கிடைக்கிறது. .!!

அறிமுக சலுகையாக எமது " KSR GAS LEAK ALARM" - யை Online ஐ விட மிக குறைவான விலையில் வாங்கி பயனடைவீர் . .!!

உயிர் காக்கும் உற்ற நண்பன் . .!!
KSR GAS LEAK ALARM - Summer சிறப்பு சலுகை விலை ரூ . 1499/-

Fire and rescue services personnel clearing the debris of a residential building that collapsed in an LPG blast at Attay...
28/05/2015

Fire and rescue services personnel clearing the debris of a residential building that collapsed in an LPG blast at Attayampatti in Salem district on Wednesday.

Wednesday’s accident near Salem that left five persons dead and many more battling for life has turned the spotlight once more on the disastrous consequences of improper handling of cooking gas cylinders.

Be safe at your home with our Gas leak alarm. .!!

Pl Call : 9843838357 ; 9043355785.

07/05/2015

Be safe at your home with our Gas leak alarm. .!!

Home safety, security and very useful rare things available at admirable rates.

உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !'நாம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும் சேர்த்துதான் கட்டு...
07/05/2015

உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !

'நாம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும் சேர்த்துதான் கட்டுகிறோம். எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இன்ஷூரன்ஸைப் பயன்படுத்தி 40 லட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு பெற முடியும். ஆனால், இந்தச் செய்தியை இன்ஷூரன்ஸ் நிறுவனமோ, கியாஸ் நிறுவனமோ மக்களுக்குச் சொல்வது இல்லை!’ இப்படி ஒரு செய்தி குபீரெனப் பரவுகிறது. அது உண்மையா?

உண்மைதான்! ஆனால், முழு உண்மை அல்ல. எரிவாயு இணைப்பை நாம் பெறும்போதே, ஒவ்வோர் இணைப்பின் மீதும் இரண்டு வகையான இன்ஷூரன்ஸ் எடுக்கப்படுகின்றன. ஒன்று, சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் எடுப்பது; மற்றொன்று நமது கியாஸ் ஏஜென்சி எடுப்பது. இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் தொகையை, கியாஸ் ஏஜென்சிகளும் கியாஸ் நிறுவனங்களுமே செலுத்திவிடும்; வாடிக்கையாளர்களாகிய நாம் செலுத்தவேண்டியது இல்லை.

ஒருவேளை கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதற்கான தொகையை இன்ஷூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் இது பொருந்தும். இதன்படி, தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரையிலும், மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரையிலும், உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக இழப்பீடு பெற முடியும். இந்த இழப்பீட்டுக்கான உச்சவரம்பு எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இப்படி ஒரு இன்ஷூரன்ஸ் இருப்பது குறித்து, கியாஸ் ஏஜென்சிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் மக்களுக்கு எந்தத் தகவலும் சொல்வது இல்லை. இது தொடர்பான விழிப்புஉணர்வும் மக்களிடம் இல்லை. இதனால் கியாஸ் சிலிண்டர் விபத்துக்கள் எத்தனையோ நடந்திருந்தும், கடந்த 20 ஆண்டுகளில் ஒரு கிளெய்ம்கூட செய்யப்படவில்லை. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய், பிரீமியம் என்ற பெயரில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குச் செல்கிறது.

அதே நேரம், இந்த முறையில் கிளெய்ம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றன. விபத்து ஏற்பட்டதும் உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள், சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனத்திடமும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமும் தெரிவிப்பார்கள். பிறகு, அதிகாரிகள் குழு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அதுவரையில் விபத்து நடந்ததற்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்க வேண்டும். யாருக்கேனும் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை இணைக்க வேண்டும். விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், அதற்கான மருத்துவமனை/ மருந்துப் பொருட்களின் ரசீதுகளை இணைக்க வேண்டும். விபத்தின் மூலம் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும். ஆனால், இவையெல்லாம் விபத்துக்குப் பிறகான நடைமுறை.

விபத்துக்கு முன்னரே நாம் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ஏகமாக இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். அப்படி சான்று பெற்றிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. நமது பெயரில் நாம் பெற்ற கியாஸ் சிலிண்டராக இருக்க வேண்டும். அவசரத்துக்குக் கடன் வாங்கிய சிலிண்டரில் விபத்து ஏற்பட்டால், கிளெய்ம் செய்ய முடியாது. இப்படிப் பல நிபந்தனைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நிறைவேற்றி இருந்தால் மட்டுமே, விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியும்.

'ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற பொருட்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்’ என்ற முதல் இரண்டு விஷயங்களிலேயே நம் ஆட்கள் அத்தனை பேரும் ஃபெயில் ஆகிவிடுவார்கள். இத்தனை சிக்கலான நிபந்தனைகளை வைத்துக்கொண்டு, அதை மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

'இது தொடர்பாக விளம்பரங்கள் செய்வது இல்லை என்பது உண்மைதான். அதற்காக இதை நாங்கள் மறைக்கிறோம் எனச் சொல்ல முடியாது. எல்லா விவரங்களும் எங்கள் இணையதளங்களில் வெளிப்படையாக இருக்கின்றன’ என்கிறார்கள் எரிவாயு நிறுவன ஊழியர்கள்.

கியாஸ் சிலிண்டர் விபத்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கின்றன. சிலிண்டர்களை எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கையாள்வது இதற்கு முக்கியக் காரணம் என்றால், காலாவதியான சிலிண்டர்கள் இன்னொரு காரணம்.

அது என்ன காலாவதியான சிலிண்டர்?

'இந்த சிலிண்டர், எரிவாயு நிரப்பும் தரத்துடன்தான் இருக்கிறது’ என, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு சிலிண்டரும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்தச் சோதனையில் சிலிண்டரில் ஏதேனும் குறை இருப்பது தெரியவந்தால், அது சரிசெய்யப்பட்டு இந்தியத் தர நிர்ணய அமைப்பு (ஙிuக்ஷீமீணீu ஷீயீ மிஸீபீவீணீஸீ ஷிtணீஸீபீணீக்ஷீபீs) சான்று அளித்த பின்னரே, மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும். ஒரே சிலிண்டரில் இரண்டாவது முறையாகக் குறை இருப்பது கண்டறியப்பட்டால், அது பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும்.

சிலிண்டரின் தலைப்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கின்றன அல்லவா? அதில் ஒரு கம்பியின் பக்கவாட்டில், சிலிண்டரின் எடை விவரங்கள் இருக்கும். இன்னொன்றில், காலாவதி தேதி குறித்த எண்கள், சுருக்கெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையில் கி, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் ஙி, ஜூலை முதல் செப்டம்பர் வரை சி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் ஞி. உதாரணத்துக்கு உங்கள் சிலிண்டரில் கி–15 என எழுதப்பட்டிருந்தால், அதன் எக்ஸ்பயரி தேதி மார்ச் 2015 என அர்த்தம். இந்தத் தேதிக்குப் பிறகு சிலிண்டரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. கியாஸ் கசிவு முதல் சிலிண்டர் வெடிப்பது வரை பல அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகம். காலாவதித் தேதியைக் கடந்து இருந்தாலோ, மிக நெருக்கத்தில் இருந்தாலோ, அந்த சிலிண்டரை நிராகரிக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு!

காப்பீடு பெற...

''கியாஸ் ஏஜென்சி தரப்பில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். கியாஸ் கம்பெனி தரப்பில் எடுக்கணீப்படும் இன்ஷூரன்ஸ் தனி. என் அனுபவத்தில் இதுவரை யாரும் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணியது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அடுப்பு, லைட்டர், டியூப் போன்றவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக எங்கள் பிரதிநிதிகள் சென்றால் மக்கள் யாரும் ஒத்துழைப்பதும் கிடையாது. ஒருவேளை இனிமேல் யாரேனும் இப்படி தரச் சான்றிதழ் பெற்று உரிய முறையில் பராமரித்தால், ஏதேனும் விபத்து ஏற்படும்போது இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம்''

16/04/2015

எமது விளம்பர பிரதி தஞ்சை மலர் புத்தகத்தில் வெளியிடபட்டுட்டது; அந்த விளம்பர பிரதி உடன் எங்களை தொடர்பு கொள்ளும் போது விலை இல் சலுகை வழங்கப்படும். .!!

04/03/2015

Four injured in cylinder blast:

A cooking gas cylinder exploded in a teashop in a populated Manavalan Nagar on 60-Feet Road at Sellur here on Tuesday evening.

Four persons including shop owner and tea master suffered over 50 per cent burn injuries. Police said Pandi (38), son of Baskaran of Manavalan Nagar, Durairaj (60), teashop owner and son of Mayandi Thevar, from same locality, Siranjeevi (24), son of Veluchami (a customer), and Palani Kumar (24), son of Adhimoolam (tea master) also suffered burns. They were rushed to the Government Rajaji Hospital.

Sellur police registered a case.

HINDU- FEB 28 2015.

HOME GAS LEAKAGE DETECT ALARMCE Certified Product .
03/03/2015

HOME GAS LEAKAGE DETECT ALARM

CE Certified Product .

Distributors of Home safety Products:HOME GAS LEAKAGE DETECT ALARMCE Certified Product .Features:Hot Wire type SensorEas...
03/03/2015

Distributors of Home safety Products:

HOME GAS LEAKAGE DETECT ALARM

CE Certified Product .

Features:

Hot Wire type Sensor
Easy Identification with 3 Color LED
Self test Function
Japanese Durable Sensor Head
Comes with a 9V Battery Backup
Provision for Optional Auto Shut Off Valve
Easy Installation with a Metal Bracket
European Standard Product
2 Year Limited Warranty.

Features:*Hot Wire type Sensor*Easy Identification with 3 Color LED*Self test Function*Japanese Durable Sensor Head*Come...
26/02/2015

Features:

*Hot Wire type Sensor
*Easy Identification with 3 Color LED
*Self test Function
*Japanese Durable Sensor Head
*Comes with a 9V Battery Backup
*Provision for Optional Auto Shut Off Valve
*Easy Installation with a Metal Bracket
*European Standard Product
*2 Year Limited Warranty

Gas leakage detect Alarm CE Certified ProductCE  # EN50194Technical Specifications :Power                               ...
25/02/2015

Gas leakage detect Alarm

CE Certified Product
CE # EN50194

Technical Specifications :

Power : Green LED ON
Alarm : Red LED Flashing
Fault : Yellow LED Flashing
Sensitivity :

Address

Thanjavur
613001

Telephone

+919843838357

Website

Alerts

Be the first to know and let us send you an email when KSR Enterprises TNJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KSR Enterprises TNJ:

Share