Tiruchengode LIVE

Tiruchengode LIVE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tiruchengode LIVE, Home improvement, 145 vavi, Tiruchengodu.
(2)

12/08/2022
*நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் 11 அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...*‼️_*விண்ணப்பிக்க...
06/03/2022

*நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் 11 அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...*‼️
_*விண்ணப்பிக்க கடைசி நாள்*_
*ஏப்ரல்-4*
🤝👍 நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

திருச்செங்கோடு நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அருமை சகோதரி திருமதி.நளினி சுரேஷ்பாபு அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்...
04/03/2022

திருச்செங்கோடு நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அருமை சகோதரி திருமதி.நளினி சுரேஷ்பாபு அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

For please contact 7010154984
26/08/2021

For please contact 7010154984

17/05/2020

சொல்லொண்ணா துயரத்தில் இன்று திருச்செங்கோடு இருக்கிறது..

நினைவு தெரிந்த நாள் முதல் வைகாசி விசாகத் தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டது இல்லை..

அந்த 10 நாட்கள் இருக்கே சொர்கத்துலயே திருவிழா, மக்கள் பெருவிழா.. அக்னி வெயில்ல தேர இழுத்து உச்சி குளிர்ந்து, உள்ளம் குளிர்ந்தவிங்க திருச்செங்கோட்டுகாராய்ங்க..

நெஞ்சு ஒரு மாதிரி கனம்மா இருக்கு..

நாலு வீதிலையும் முந்தி அடித்துக்கொண்டு அம்மையப்பனை பார்க்கும் ஆர்வம் இருக்கே.. அம்மையப்பன் முகத்தை பார்த்த உடனே உடம்புல ஒரு சிலிர்ப்பு தட்டுமே, கண்கள் குளமாகுமே.. 😭

தேர் இழுக்கும்போது சாதி மத பேதம் இல்லாம எல்லா மக்களும் அம்மையப்பன மலர் தூவி வரவேற்பார்களே..

தேரை இழுத்துட்டு நிக்குற நேரமெல்லாம் எங்கிருந்தோ பறந்து வரும் ரோஸ் மில்க், பானகரம், மோர், தண்ணி, ரஸ்னா னு எல்லாத்தையும் கேட்ச் புடிச்சு குடிப்போமே ..

திருவிழா முடிஞ்சு மலைக்கு போறப்ப கூட வான வேடிக்கை போட்டு மக்களை கொண்டாட்டமா வைச்சிருப்பமே..

சாரை சாரையாக மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் சுற்றுமே.. எல்லாம் அம்மையப்பனையும், செங்கோட்டு வேலவரையும், ஆதிகேசவ பெருமாளையும் பார்க்க..

தேர் இழுத்து முடிச்சதும் தேரை நிலை சாத்திட்டு ஒரு ஆட்டம் போடுவோமே. அம்மையப்பனை நிலை சேர்த்த நிலைகொள்ள தருணம் அது..

தேரை நிலை சேர்த்திட்டு தேர்ல இருக்க அம்மையப்பனை பாக்க போட்டி போட்டு ஓடுவமே அது ஒரு ஆனந்த தருணம்.

எல்லா பாரத்தையும் அம்மையப்பனிடம் இறக்கி வைத்து விட்டு பெருமூச்சு விட்டு செல்வோமே..

"தேரு எங்க வருது? பூக்கடை முக்குலயா? அண்ணா சிலை பக்கத்துல போயாச்சா??? நெல்லு குத்தி மண்டபம் தாண்டியாச்சா???? நிலை சேர்த்தியாச்சா???" கேள்வியும் பதிலும் ஓட்டமும் நடையும் ஒரே கொண்டாட்டம் தான்.

சாயங்காலம் ஆனா குழந்தைங்களுக்கு தூறி ஆட போகணும். இளவட்ட பசங்களுக்கு சைட் அடிக்க போகணும். கண்ணால பேசி காதல் தூது விட்டு அந்த புள்ள எந்த தூறி ஆடுதோ அதே தூறி ஆடி கொண்டாடி கூத்தாடி

அம்மா காளான் வேணும் மா

அப்பா பாம்பே அப்பளம் வாங்கிதா பா

மச்சான் வாடா மிளாக பஜ்ஜி சாப்பிட போலாம்.

அண்ணா வாண்ணா அந்த தூறி ஆட போலாம்

உலகமே பார்த்து வியக்கும் ஒப்பற்ற பெருவிழா..

ப்பீ.. ப்பீ.. ப்பீ

சாமி சாமி இங்க பூ போடுங்க.. சாமி எனக்கு..

இந்தாங்க பாட்டி நீங்க கொஞ்சம் சாமி பூ வெச்சுக்கங்க..

நாளைக்கு திருக்கல்யாணம் எத்தனை மணிக்கு?

அந்த சேனல் போடு டா அதுல தான் கிளியரா காட்றாய்ங்க..

தாலி கட்டியாச்சா??

பங்கு காலைல 10 மணிக்கு வந்துருடா அப்பறம் கூட்டம் ஏறிரும்.. வடம் புடிக்க முடியாது..

கொட்டடிக்கணுமா?? அடிங்க.. டன்டனக்குற டனக்குனக்குற

தேர் இழுத்த பக்தகோடிகள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்..

இந்த பேச்சுக்களையெல்லாம் இந்த வருஷம் கேக்க முடியாதுல்ல...

மனம் குமுறுகிறது, நெஞ்சு அடைக்கிறது, கண்களில் வெப்பநீர் வழிகிறது..

இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல..
---------------------------------------------------------------
திருச்செங்கோட்டுகாரன்.....
பாதுகாப்பாவீட்டுலஇருப்போம்

*திருக்கொடிமாடச்செங்குன்றூர் அம்மையப்பன் தேர்திருவிழா* *சிவசிவ*

திருச்செங்கோடு

சித்திரை முழு நிலவில் தெய்வ திருமலை
08/05/2020

சித்திரை முழு நிலவில் தெய்வ திருமலை

சுமார் 100_ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள திருக்கோவில்களின்பொக்கிஷமான அரிய புகைப்படங்...
25/04/2020

சுமார் 100_ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள திருக்கோவில்களின்
பொக்கிஷமான அரிய புகைப்படங்கள்.

*🔴🔴 நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பணிகளில் பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி*
24/04/2020

*🔴🔴 நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பணிகளில் பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி*

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கடந்த இரு நாட்களாக நம் மாவட்டத்தில் புதிய கொரோனா நோய் தொற்றாளர்கள் கண...
12/04/2020

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கடந்த இரு நாட்களாக நம் மாவட்டத்தில் புதிய கொரோனா நோய் தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை. இனி வரும் நாட்களிலும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாக இருக்கட்டும். அரசு அறிவிக்கும் வரை வீட்டினுள்ளேயே இருப்போம். சமூக இடைவெளியை கடைபிடிப்போம். கொரோனாவை தவிர்ப்போம்.👍🏻👍🏻🙏🙏

Address

145 Vavi
Tiruchengodu
637211

Telephone

+91 95004 17487

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiruchengode LIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tiruchengode LIVE:

Share