24/05/2026
உங்கள் மேலான அன்புடனும் ஆதரவுடனும்,
என்னடுத்த படைப்பாய் இதோ வந்துவிட்டாள் - ❤️
புத்தகம் :
மேதகுவின் மகள் - துவாரகா, பாகம் 01.
வெளியீடு:
Charithraa's Publications
பக்கங்கள்: 180
விலை: 250 + PC
Contact :
+91 74185 80369
+91 70928 84657
"In the Search of the Princess,
He found something undeniable.!"
இந்த Tagline, புத்தகத்துக்கான Cover Page டிஸைன் செய்து முடித்து அனுப்பும் கடைசி நொடிவரை தோன்றவேயில்லை.
முன் தினம் மாலை, அலுவலகம் விட்டுக் கிளம்பும் முன் Proof reading-ற்காக Office Printer-ல் கொடுத்த பிரிண்ட் ஸ்ட்ரக் ஆகி நின்றுவிட, ரெண்டு தட்டு தட்டியதில் "கொய்ங்க் கொய்ங்க்" என்று பல்லிளித்தது.
இரவுக்குள் நான் சரிபார்த்து Final பிரிண்ட்டிற்கு மறுநாள் அனுப்ப வேண்டும். இந்த நேரம் பார்த்து ப்ரிண்டர் மக்கர் செய்ய, Print Cancel செய்து அந்த பாடாவதி ப்ரிண்டரை நாலு எத்து விட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன்.
வீட்டுக்கு போகும் வழியில் உள்ளுக்குள் இரண்டாய்ப் பிரிந்து இருவேறு யோசனை.
"ஒருவேளை நாம வந்ததுக்கு அப்புறம் பிரிண்ட் வந்துருந்தா..?"
"சேச்சே...அதான் Print Cancel கொடுத்தாச்சுல்ல...! அப்புறம் என்ன...?"
"இல்ல..ஒருவேளை வந்து...நைட் ஷிஃப்ட் ஸ்டாஃப் ஆளுங்க யாராவது எடுத்துப்பார்த்து....."
"அச்சச்சோ....அது ரிஸ்க்காச்சே..??!"
ஏனெனில் நான் எழுதுவேன் என்பது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது. அது தெரிந்த ஒரே ஆள் (Scandal Queen கதையில் வரும் ஆர்த்தி) வைகா தான். ஒருவேளை எல்லோருக்கும் தெரிந்தால், அது நன்றாய் இராது. அந்தப்பார்வையிலேயே நான் பார்க்கப்படுவேன்.
"ஒருவேளை..பிரிண்ட் வந்து...."
சடெக்கென்று காரைத் திருப்பி அலுவலகம் வந்து பார்த்தால்,
"கொய்ங்க் கொய்ங்க்" மீண்டும் பல்லிளித்தது. Print Cancel-ஐ உறுதிப்படுத்திவிட்டு ப்ரிண்டரை இன்னும் நாலு எத்து நிம்மதியாக எத்திவிட்டு வீடு வந்தாயிற்று. Proof Reading, Final Correction என்று எதுவும் செய்ய இயலவில்லை.
மறுநாள் காலை.
அலுவலகம் நுழைந்ததும் வேகமாய்ச் சென்று பார்த்தால்,...
"கொய்ங்க் கொய்ங்க்"
"அப்பாடி..பிரிண்ட் எதுவும் வரல...!"
இருந்தாலும் பிரிண்டரைச் சுற்றிமுற்றி பார்வையை சுழலவிட,
"சாரே.... எந்தா தேடுது...?" - அலுவலக அட்மின் ராகுல். மலையாளி. பிரிண்டருக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பவன்.
"ஏ அதோன்னும்மில்லை...சும்மா இவிட நின்னேன் கேட்டியோ..?" கேவலமான மலையாளத்தில் பதில் பகன்று நிம்மதியோடு நகர்ந்தேன்.
பின் வழமையான அலுவல்கள், மீட்டிங்குகள்....
மதியம்போல், மீண்டும் ராகுல் வந்தான்.
"ஏட்டா...இன்னல ப்ரிண்ட் ஏதும் கொடுத்தோ..?"
ஜெர்க்கானேன்.
"இல்லியே.?"
"பின்ன ராவுல அங்ஞனே வந்து என்ன தேடுச்சு...?"
"இல்லல்ல..ச்சும்மா..."
"பின்ன கொழப்பமில்ல.....ஞான் அவிட ஒரு இருநூறு A4 பேப்பர் கண்டு....எல்லாமே தமிழ்..அதான் நிங்களிடத்தே வன்னு சோதிச்சு..!"
"அடப்பாவி...! இதத்தாண்டா நீ முன்னாடி சொல்லிருக்கணும்..!" என்று உள்ளுக்குள் ஜெர்க்காகி,
"ஆமா..வேற யார்கிட்டயாச்சும் சோதிச்சியா..?"
"ம்ம்ம்ம்....."தலையை மேலே உயர்த்தி ரெண்டு நிமிடம் யோசித்தான்.
"சோதிச்சியான்னு தான்டா கேட்டேன்..அதுக்கு ஏன்டா என்னைய சோதிக்கிற..?" என்பது போல் நான் அவனையே பார்த்துக்கொண்டிருக்க,
"இல்லே....சோதிக்கணுமோ..?"
"யப்பாஹ்...நீ ஒன்னும் செய்ய வேணாம்...அந்த பேப்பர் கட்டை அப்படியே கொடு..போதும்.!"
"ஆஹ்..பின்னே.....ஈவ்னிங் தரட்டோ...?"
"ஏன்டா....?"
"இல்ல...80 பேஜஸ் கழின்னு..பேலன்ஸ் நூறு பேஜஸ் உண்டல்லோ..அதையும் படிச்சுட்டு....."
"அடேய் அது தமிழ்டா..! நீ மலையாளம்...உனக்கெப்படி புரியும்..?"
"என்னேட்டா...டெக்னாலஜி...கூகுள் ட்ரான்ஸ்லேட் செஞ்சு படிச்சன்..!"
"அடப்பாவி...ஒன்னு ஒன்னா ட்ரான்ஸ்லேட் பண்ணி...டைம் எடுத்துருக்குமே டா...?"
ஜென்டில்மேன் செந்தில் மாதிரி கையை காற்றில் அசைத்து, "ஹ..ஹ...!"வென்றான்.
"அப்ப நீ காலைல இருந்து எந்த வேலையும் பாக்கல..?"
மீண்டும், "ஹ..ஹ...!".
மாலை.
"ஏட்டா..."
நிமிர்ந்தேன்.
அவன் கையில், ஒரு ஸ்பைரல் புத்தகம்.
வெறும் பேப்பர் கட்டுகளாய் இருந்ததை, ஸ்பைரல் பைண்டிங் போட்டு எடுத்து வந்திருந்தான்.
கொடுத்தான்.
முகம் ஒருமாதிரியாய்.
"அரவிந்தேட்டா...இனி இதுல பணி உண்டோ....?"
"ஆமாமா..கொஞ்சம் செக் பண்ணனும்..!"
"ஞான் ஒன்னு பறையட்டோ..?"
"ம்ம்ம்..."
"டைகேர்ஸ் குறிச்சு எங்கட ஸ்டேட்ல ஒன்னும் அபிப்ராயம் இல்ல கேட்டியோ..பின்னே..ஈ ஸ்டோரில...நீங்கள் அழ வெச்சுட்டு உண்டு...எந்தா ஒரு டெடிகேஷன்...ஒரு எனர்ஜி...ஒரு ஃபயர்..."
எழுத்தைத்தான் பாராட்டுகிறான் என்று நினைத்து,
"எனக்கா..?"
"ப்ச்..டைகேர்ஸுக்கு பறஞ்சுது..!"
"ஓ..." அமைதியாய்.
"ஒரு ஸ்டோரி..கூடவே டைகேர்ஸ்...பின்னே இன்னொரு ஸ்டோரி...கூடவே டைகேர்ஸ்...பின்னேயும் இன்னொரு ஸ்டோரி...அங்கனயும் டைகேர்ஸ்...அடிபொலி போ..!"
"இப்பவும் டைகர்ஸ் தானே...?"
"ஆஹ்..நிங்கட ரைட்டிங்க பறஞ்சுது.!"
"ஒஓஓஓஓஓஓஓ..." முத்துவில் ரஜினி சொல்வாரே, அப்படியொரு ஆனந்த "ஓ".
"பின்னே....ஈ பொண்ணு சுஷாந்தினி..வாட் எ கேர்ள்....வாட் எ லவ்....வாட் அன் ஆல்ஃபா கேரக்டர்...."
"ஒஓஓஓஓஓஓஓ..." மீண்டுமொரு ஆனந்த "ஓ".
"பக்ஷே..ஆயாளு...."
"ஏயாளு...?"
"அதான்...அந்த ஆஷுபத்ரி குஞ்சன்..."
"எதே..?"
"பின்னே...? எந்தா ஆளு அவன்..? நோ சென்டிமென்ட்ஸ்..நோ கேரக்டர்..ஆ சுஷா கெடச்சும் வேண்டான்னு எந்தக்கு பறையுது..? பிராந்தன்... பட்டிமகன்..! ஞான் அவனே கண்டால் சவட்டி களையும்..!"
அவன் என்னைச் சொல்வது போலவே உள்ளுக்குள் சுட்டதால் எழுந்து தள்ளிக்கொண்டே போய் அவனிருக்கையில் அமர வைத்து,
"போதும்..!"
இது, போதும்.!
அதன்பிறகு நான் Final check, Proof check என்று எதுவுமே செய்யவில்லை.
அது அவசியமென்று தோன்றவுமில்லை.
ஆனால்,
"In the Search of the Princess,
He found something undeniable.!"
இந்த Tagline அவசியமென்று தோன்றியது.
கதைக்குள்ளே நாயகன் என்ன கண்டுபிடிக்கிறான் என்பது வேறு,
கதைக்கு வெளியே நான் கண்டுபிடித்தது,
துவாரகாவை எழுதுவதற்காக நிறைய வாசித்தது, நிறைய யோசித்தது எல்லாமே, மொழிமாற்றம் செய்யப்பட்டு வேற்று மொழியாரால் வாசித்தாலும் உணர்வுகளை கடத்த முடிகிறது என்றால்,
அது ஒரு மாபெரும் இனத்தின் எழுச்சிப் போராட்டத்தின் நிறைவேறா தாகம்...அந்த தாகத்தை தீர்க்கவொருத்தி வல்லமை பெற்றிருக்கிறாள்.
அவள்தான் "மேதகுவின் மகள்".❤️
-----------------------------------
குறிப்பு:
ஏற்கனவே நெடுந்தொடராய் வாசித்தவர் உணர்வர். அறிவர். அவர்தம் கடமை மேலும் பலபேர்க்கு இப்படைப்பை சேர்ப்பது மட்டுமே. பின்னும் புதிதாய், புத்தகமாய் வாசிக்க நினைப்போர்க்கு,
புத்தகம் : மேதகுவின் மகள் - துவாரகா, பாகம் 01.
வெளியீடு : Charithraa's Publications
பக்கங்கள் : 180
விலை : 250 + PC
Contact :
+91 74185 80369
+91 70928 84657
-----------------------------------
Writer Charithraa's
Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I