15/10/2020
வாழவே வீடு இல்ல ஆனா தினமும் சிகரட்🚬 பிடிக்க மட்டும் கொரஞ்சது.. ஒரு நாளைக்கு 300/- ரூபா வேணும்..
புள்ளி விபரம் எல்லாம் சரியாக எனக்கு தெரியாது இருந்தாலும் இன்னைக்கு சுமாரா...
ஒரு சிகரட் 🚬 50/- ரூபா.
ஒரு புளோக் கல் 🎞️ 45/- ரூபா.
இருக்கும்னு நினைக்கிறேன்...
சிகரட்🚬 குடிச்சா
இவருக்கு என்னமோ பெரிய கமலஹாசன் ரஜினிகாந்த்ன்டு நெணப்பு..🤔
காலையில எழுந்து டீ குடிச்சதும் சிகரட் 🚬1 வேணும்.
காலை சாப்பிட்டதும் 🚬1
பகல் மதியம் சாப்பிட்டதும் 🚬1
பின்ன மாலையில் டீ குடிச்சா 🚬1
இரவு சாப்பிட்டதும் 🚬1
இரவு தூங்க முன் 🚬1
அப்பப்ப டென்ஷனாம்..
அப்படி டென்ஷன் வந்தா இடையில 🚬வேணுமாம்...
கொரஞ்சது ஒரு நாளைக்கு சிகரெட்🚬 சிலவுக்கு மட்டும் 300/- ஒதுக்கிட்டு 🚬 புகைத்தலால் பணத்தையும் கரியாக்கிட்டு., மண்டையில ஒரு கிக்கு எடுத்துட்டு, உடம்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் நோயையும் தேடிக்கொண்டு, ஆண்மையையும் இழந்து, இருக்கும் சிலருக்கு புரிவதில்லை.
கேட்டால் நிறுத்த முடியவில்லை என்ற பதிலை தான் சொல்வார்கள்.
பிறந்த குழந்தை தொடர்ந்து இரண்டு வருடம் தாய் பால் மட்டும் தான் குடிக்க தெரியும். அந்த தாய் பாலை கூட பிறந்து இரண்டு வருடங்களில் மறந்து விடுகிறார்கள் ஆனால் இந்த சிகரட் 🚬 எல்லாம் என்ன. எப்பவோ இடையில் வந்த ஒன்று. நிறுத்த முடியும் ஆனால் நிறுத்திக் கொள்ள வில்லை அது தான் உண்மை.
https://m.facebook.com/story.php?story_fbid=681496479469716&id=100028281103831
சிகரட்🚬 ஒன்றை விட ப்ளாக் 🎞️ கல் ஒன்றின் விலை குறைவாகத்தான் இருக்கும்.
உங்களால் முடியும் உங்களை மாற்றிக் கொள்ள, முன்னேற, ஆனால் நீங்கள் அதற்கு முயற்சி செய்ய வில்லை.
நீங்கள் போதைக்கு அடிமையாக்கும் போது வாழ்க்கையில் பின்னோக்கிச் செல்வது உங்கள் மனைவி மற்றும் உங்கள் பிள்ளைகள் தான். என்பதை முதலில் உணர்ந்தாள் அடுத்த கணமே இந்த 🚬சிகரட்டை தூக்கி வீசி விடுவீர்கள். ஆனால் உங்கள் மனம் இதற்கு இடம் கொடுக்கவில்லை என்றால் நிச்சியமாக நீங்கள். 🚬புகைத்தலுக்கு அடிமை தான் என்று ஒப்புக் கொள்ளுங்கள்.
உங்கள் மனைவி பிள்ளைகள் எதிர்காலம் பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
உங்களுக்கு எப்பொழுதும் எந்த சந்தர்ப்பத்திலும் மரணம் நிகழலாம். உங்கள் மரணம் அது உங்களோடு முடிந்து விட்டது. அதன் இழப்பு உங்கள் மனைவி பிள்ளைகள் இவர்களுக்கு மட்டும் தான். அதன் பின் உங்கள் மரணம் மற்ற அனைவருக்கும் ஒரு மரண செய்தி மட்டும் தான். உறவினர்கள் ஓரிரு மாதம் கவலை படுவார்கள். அதன் பின் அவரவர் வேலைகளை பார்த்துக் கொள்வார்கள்.
நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்கள் மனைவி பிள்ளைகள் இவர்களுக்கு எதுவும் செய்து விட்டு செல்லுங்கள் அவர்கள் நீங்கள் அமைத்துக் கொடுத்ததில் நிம்மதியாக வாழலாம்.
நாளை வேண்டாம் இன்று முதல் உங்கள் 🚬சிகரட் புகை பிடிக்கும் பழக்கம் இதை முழுமையாக வெறுத்து நிறுத்தி விடுங்கள்.
🚬 சிகரட் இற்கு சிலவலிக்கும் ஒவ்வொரு 50/- ரூபாவை சேருங்கள்.
10 நாளைக்கு ஒரு தடவை நீங்கள் சேர்க்கும் 300×10=3000 ரூபா பணம் அந்த கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வீடு கட்ட தேவைப்படும் ப்ளாக் கால்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி அடுக்கி வாருங்கள். அப்பொழுது பாருங்கள் உங்களுக்குள்ளேயே ஒரு உற்சாகம் மட்டுமல்ல ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். என்ற ஒரு நம்பிக்கையில் என்னுடைய இந்த அபிப்பிராயம் உங்கள் மனதை தொட வைக்கும். அப்படி உங்களை மாற்றினால் என்றாவது ஒரு நாள் என் ஞாபகம் வந்தால் இந்த தென்றல் எனக்காகவும் கொஞ்சம் பிரார்த்தை செய்து கொள்ளுங்கள் நன்றி..