17/01/2022
Gartmore Falls !
Hatton நகரிலிருந்து Maskeliya ஊடாக Gartmore falls யை சென்றடையலாம். அன்னளவாக 23 கிலோ மீட்டர் தூரம் என நினைக்கிறேன். Maskeliya நகரிலிருந்து ஒடுக்கமான பாதை, குன்றும் குழியுமாக இருக்கும், கவனமாக செல்ல வேண்டும்.
Gartmore சந்தியை சென்றடைந்து, Estate ஊடாக சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். தனியார் Estate என்பதால் Gartmore சந்தியில் வாகனத்தை நிறுத்தி, அதற்கு மேல் நடக்க வேண்டும்.
குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, நடந்து செல்வதற்கு பாதை இல்லை, பல பேர் நடந்த காலடித்தடங்கள், ஏலவே சென்ற பாதைபோல் இருப்பதால் அதனை பின்தொடர்ந்தால் எப்படியோ நீர்வீழ்ச்சி இடத்திற்கு செல்ல முடியும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமா என நினைக்கலாம். அந்த அழகை காண இதையும் விட கஷ்டப்பட்டு போகலாம். அவ்வளவு அழகானது.
நீர்வீழ்ச்சியின் உச்சியில் குளிக்கலாம், நீரின் அளவையும், காலநிலையையும் கட்டயாம் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பாறைகள் வழுக்கல் நிலையில் இருப்பதால் நீர்நிலையின் உச்சியிற்கு செல்வது ஆபத்தானது.
நீர்வீழ்ச்சியின் உச்சத்திலிருந்து்பார்த்தால் மவுஸ்காலை நீர்த்தேக்கத்தை பார்க்க முடியும். இரண்டு தட்டுக்கள் இருக்கும் நீர்வீழ்ச்சியில் முதல் தட்டுக்கு கொஞ்சம் சிறமப்பட்டு கீழே இறங்க முடியும். குடிப்பதற்கு நீர், சாப்பாடை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அவசரத்துற்கு மேலே வருவது என்றால் 1.5 கிலோ மீட்டர் மேலே ஏற வேண்டும். ( கீழ் தட்டுக்கு இறங்க பாதைகள் இல்லை, மழை நேரங்களில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்)
அங்கிருந்து வெளியே வந்தால், மீண்டும் மஸ்கெலியா, ஹட்டன் செல்லலாம். கொழும்பு, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி வருபவர்கள் மஸ்கெலியாவிலிருந்து, நோட்டன், கினிகத்தேனை வந்து கண்டியை வந்தடையலாம். ! (மீண்டும் ஹட்டன் செல்ல தேவையில்லை)
ஹட்டனிலிருந்து மஸ்கெலியா வெறுமனே 19 கிலோ மீட்டர் என கூகுள் காட்டும், அரை மணி நேரத்தில் செல்லலாம் என சென்று விடாதீர்கள். ஏறத்தாற ஹட்டனிலிருந்து Gartmore செல்வதற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் எடுக்கும். மாலை 4 மணிக்கு முன் நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது சிறப்பு. ! ( ஒரு நாள் இதற்கு என்று வைப்பது இன்னும் சிறப்பு)
தனியார் காணிக்கு சொந்தமான இடத்தை தாண்டி செல்வதால், Upper Gartmore க்கு செல்ல முடியவில்லை. ஏலவே அறிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஊர் மக்களின் கூற்றுப்படி gartmore யை விட Upper GartMore falls இன்னும் அழகாக இருக்குமாம். !
கவனமாக சென்று வாருங்கள்.!
நன்றி- அஸீம் ஜஹ்பர்.