05/03/2015
கணனி வன்பொருட்கள் (சுட்ட தகவல்)
-----------------------------------------------------
குறித்த கட்டளையின் படிசெயற்படத்தக்கதும், தரவுகளை தவல்களாக மாற்றக்கூடியதும் சேமிப்புத்திறனுடையதும் பின்னர் அவற்றை மீளவழங்கக்கூடியதுமான இலத்திரனியல் சாதனம் கணனியகும்.
கணனி வன்பொருள், மென்பொருள், உயிர்பொருள்(மனிதன்) ஆகியவற்றின் கூட்டு ஆகும் .
அதில் வன்பொருள் என்பது கணனியின் தொட்டு உணரக்கூடிய பகுதியாகும்.
கணனியின் மூலம் ஆற்றப்படும் பிரதான செயற்பாடுகள்
-உள்ளீடு
-முறைவழியாக்கம்
-வெளியீடு
-தகவல்களைத் தேக்கிவைத்தல்
-கட்டுப்படுத்தல்
இச்செயற்பாடுகளைச் செய்யத்தக்க வகையில் கணனி வன்பொருட்கள் ஒழுங்கமைந்துள்ளன.
அவ் வன்பொருட்கள் பின்வருமாறு பிரித்து நோக்கப்படும்.
* உள்ளீட்டுக் கருவிகள்.
* வெளியீட்டுக் கருவிகள்.
* தேக்கச் சாதனங்கள்.
* முறைவழியாக்கும் சாதனம்
உள்ளீட்டுச் சாதனங்கள் கணனிக்குள் தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் உள்ளீடு செய்வதற்குப் பயன்படும் கருவிகளகளாகும்.
உதாரணம் :- விசைப்பலகை, சுட்டி, நுணுக்குப்பன்னி, இறுவட்டு, வருடி, கமரா, பட்டைக் குறிமுறை
வருவிளைவுச் சாதனம் என்பது, தகவல்களையும், பிற விடயங்களையும் புறத்தே பெறுவதற்குப் பயன்படும் சாதனங்களாகும்.
உதாரணமாக :- கணனித் திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி, வன்தட்டு
மையவழி அலகு 3 பிரதான பகுதிகளைக் கொண்டது
கட்டுப்பாட்டு அலகு
எண்கணித, தர்க்கிக்கும் அலகு,
நினைவகம்
கட்டுப்பாட்டு அலகு
கணினியின் எல்லாக் கட்டுப்பாட்டுப் பணிகளும் இவ்வலகின் மூலம்மேற்கொள்ளப்படுகின்றன.
தேவையான சந்தர்ப்பங்களில் அவசியமான விதத்தில்கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு கணினியின் எல்லாப் பகுதிகளையும் கட்டுப்படுத்தல்இவ்வலகின் மூலம் செய்யப்படுகின்றது.
எண்க்கணித, தருக்க்க அலகு
எல்லா விதத்திலும் அமைந்த எண்கணிதப் பணிகளும் தருக்கப் பணிகளும் இவ்வலகின் மூலம் செய்யப்படுகின்றன.
நினைவகம்
கணிப்புகளுக்காக அல்லது தயார்செய்வதற்காக மைய முறைவழி அலகிற்கு அனுப்பத் தயார் செய்யப்பட்டுள்ள தரவுகளையும் மைய முறைவழி அலகிலிருந்து புறத்தே வழங்கப்படும் தகவல்களையும் தற்காலிகமாக வைத்திருப்பதற்கு நினைவகம் பயன்படும்.
கணினியில் முதன்மை நினைவகம் இரு விதங்களில் இருப்பதைக் காணலாம்.
தற்போக்கு அணுகு நினைவகம் RAM
வாசிப்பு மட்டும் நினைவகம் ROM
தற்போக்கு அணுகு நினைவகம்
தற்காலிக நினைவகமாகிய தற்போக்கு அணுகு நினைவகத்தில் உள் ள தரவுகள் கணினியை நிறுத்தும்போதும் அதில் உள்ள மின்வலுவைத் தொடுப்பகற்றும்போதும் அழிந்து போகும்.
தற்போக்கு அணுகு நினைவகத்திற்குத் தேவையானவாறு தரவுகளைச் சேர்க்கத்தக்கதாக அதில் உள்ள தரவுகளை மாற்றலாம் அல்லது அழித்து விடலாம்.
தற்போக்கு அணுகு நினைவகம் பின்வருமாறு இருவகைப்படும்.
மாறாநிலைத் தற்போக்கு அணுகுநினைவகம்(Static Random Access Memory)(SRAM)
இயங்குநிலைத் தற்போக்கு அணுகு நினைவகம் (Dynamic Random Access Memory) (DRAM)
வாசிப்பு மட்டும் நினைவகம்
நிலையான நினைவகமாகிய வாசிப்பு மட்டும் நினைவகத்தில் உள்ள தரவுகளை மாற்றலை அல்லது அழித்தலை எளிதாகச் செய்ய முடியாது.
கணினி உற்பத்தி நிறுவனத்தினால் தேவையான தரவுகள் அதில் நிலையாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
வாசிப்பு மட்டும் நினைவகத்தில் சில வகைகள் இருப்பதைக் காணலாம்.
செய்நிரற்படுத்தத்தக்க வாசிப்பு மட்டும் நினைகம் (Programmable Read Only Memory) - (PROM)
அழிபடு செய்நிரற்படுத்தத்தக்க வாசிப்பு மட்டும் நினைவகம் (Erasable Programmable Read Only Memory) - (EPROM)
மின்னைப் பயன்படுத்தி அழிபடு செய்நிரற்படுத்தத்தக்க வாசிப்பு மட்டும் நினைவகம் (Electrically Erasable Programmable Read Only Memory) - (EEPROM)